குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம்

குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம் அல்லது குடியரசுத் தலைவருடைய கடலோர காவல்படை பதக்கம் என்பது இந்திய கடலோர காவலில் தைரியமான கடமை அல்லது தன்னலமற்ற ஈடுபாடு, அல்லது விதிவிலக்கான அர்ப்பணிப்புக்காக இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் ஒரு இந்திய இராணுவ விருதுப்பதக்கமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் தேசிய கொண்டாட்டங்களான சுதந்திர தினம் அல்லது குடியரசு தினத்தன்று இந்திய குடியரசுத் தலைவரால் வீரர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம்
வகைபதக்கம்
விருது வழங்குவதற்கான காரணம்வெளிப்படையான வீரம், தன்னலமற்ற அர்ப்பணிப்பு, தனித்துவமான மற்றும் பாராட்டத்தக்க சேவை
நாடுஇந்தியா
வழங்குபவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
தகுதிஇந்தியக் கடலோரக் காவல்படையில் பணிபுரிவோர்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிறுவப்பட்டது7 ஜூன் 1989
முதலில் வழங்கப்பட்டது26 ஜனவரி 1990
கடைசியாக வழங்கப்பட்டது26 ஜனவரி 2024
முன்னுரிமை
அடுத்தது (குறைந்த)தத்ரக்சக் பதக்கம்

வரலாறு தொகு

இந்திய கடலோர காவல்படையில் சிறப்பாகவும், துணிச்சலாகவும், கடமையில் அசாதாரண அர்ப்பணிப்புடன், பாராட்டத்தக்க சேவை புரிந்த வீரர்களுக்காகவும், அவர்களின் அர்ப்பணிப்பு கொண்ட தனிப்பட்ட செயல்களை அங்கீகரிக்கும் நோக்கிலும், குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம் (பி. டி. எம்.) 1989 ஜூன் 7 அன்று இந்திய குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. இத்தலைப்பில் முதல் விருது ஜனவரி 26,1990 அன்று வழங்கப்பட்டது. [1] [2] [3] [4]

பதக்கம் பெறுவதற்கான தகுதி தொகு

கடலோர காவல்படையின் அனைத்து அணிகளும் இந்த பதக்கம் பெற தகுதியானவர்களே. ஏற்கனவே பதக்கம் பெற்றவருக்கு மீண்டும் பதக்கம் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டால், அத்தகைய ஒவ்வொரு விருதும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பதக்கத்தில் இருக்கும் பட்டியிலேயே இணைக்கப்பட்டு வழங்கப்படும். அத்தகைய ஒவ்வொரு பட்டிக்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தின் சிறு வடிவச் சின்னம் வழங்கப்படும். இந்த பதக்கம் ஒருவரின் மரணத்திற்குப் பின்பாகவும் அவர்களை நினைவுகூறும்படி வழங்கப்படலாம். [5] [6][7][8]

வரம்புகள் தொகு

குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம், புகழ்பெற்ற எந்தவொரு சேவை மற்றும் துணிச்சலுக்காகவும் வழங்கப்படலாம். எல்லாவருடங்களிம் இத்தகைய புகழ்பெற்ற சேவைக்காக வழங்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கை இரண்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு ஆண்டிலும் துணிச்சலுக்காக வழங்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லை.

பதக்கம் பின்வரும் காரணங்களுக்காக வழங்கப்படுகிறது

  • கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், கடலில் அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதிலும், நாட்டின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்குவது
  • வானிலை அல்லது கப்பல்கள்/படகுகள் அல்லது உபகரணங்களின் வரம்புகள் போன்ற கடினமான சூழ்நிலைகளில் கடலோர காவல்படை நடவடிக்கைகளை நடத்துவதில் வெற்றி.
  • இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் கடத்தல், வேட்டையாடுதல் அல்லது தேசிய நலன்களைப் பாதுகாப்பது போன்ற தடுப்பு அல்லது சோதனை போன்ற சிறப்பு சேவை.
  • நீண்ட சேவை, ஆனால் மிகவும் விதிவிலக்கான திறன் மற்றும் தகுதியால் வேறுபடுத்தப்படும்போது மட்டுமே.
  • பாதகமான சூழ்நிலைகளிலும் கூட அவர்களது கடமையை அர்ப்பணிப்புடன் செய்வது
  • தேசத்தின் மதிப்புகளை சர்வதேச அளவில் நிலைநிறுத்துவதற்கும் அயராது உழைப்பது

பதக்க வடிவம் தொகு

இந்த பதக்கம் வட்ட வடிவத்தில், ஒன்று மற்றும் மூன்று-எட்டு அங்குல விட்டம் கொண்டது, தங்க முலாம் பூசப்பட்டுள்ள வெள்ளியால் ஆன இதன் மையத்தில் கடலோர காவல்படையின் சின்ன வடிவமைப்பும், அதன் மேலே "குடியரசுத் தலைவரின் கடலோர காவலர் பதக்கம்" மற்றும் கீழே "இந்தியா" என்ற சொற்களும் பொறிக்கப்பட்டு காணப்படும், பதக்கத்தின் விளிம்பில் இரண்டு ஐந்து முனை கொண்ட நட்சத்திரங்களால் பிரிக்கப்படுகின்றன. பின்புறத்தின் மையத்தில், இந்தியாவின் தேசியச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் மேல் விளிம்பில் ஒரு வெற்று கைப்பிடியுடன் ஒரு மாலை இணைக்கப்பட்டுள்ளது. விளிம்பில், பதக்கம் வழங்கப்பட்ட நபரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

தனியாக அணியப்படும்போது, வழங்கப்படும் ஒவ்வொரு பட்டிக்கும் தங்க முலாமுடன் கூடிய ஒரு சிறிய வெள்ளி ரோஜா இணைக்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. Gazette of India.
  2. Central Police Organisations.
  3. Darpan. "Pratiyogita Darpan".
  4. "Tn-Rajnath-Cg Officers (RPT)".
  5. "Five ICG personnel get Tatrakshak medals".
  6. "President awards medals for Meritorious Service to Indian Coast Guard personnel".
  7. "President approves Tatrakshak medals to Indian Coast Guard personnel".
  8. "President approves Tatrakshak medals to Indian Coast Guard personnel".