குடிவாடா திப்பா, விஜயநகரம்
குடிவாடா திப்பா என்பது ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டம், போகபுரம் மண்டலத்தில் உள்ள குடிவாடா (ஆங்கிலம்: Gudiwada) கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்று ஆகும். இது கோஸ்தானி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
குடிவாடா திப்பா | |
---|---|
ஆவணப்படுத்தப்பட்ட பௌத்த தளம் | |
ஆள்கூறுகள்: 17°56′21″N 83°25′57″E / 17.93917°N 83.43250°E | |
Country | இந்தியா |
State | ஆந்திர பிரதேசம் |
District | விஜயநகரம் |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
Nearest city | விசாகபட்டணம் |
கள ஆய்வு
தொகுஅக்டோபர் 2012 ஆம் ஆண்டு இந்தக் குன்றின் மீது (குடிவாடா திப்பா) மேற்கொண்ட ஆய்வுகள் [1] வாயிலாக கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தகக் கருதப்படும் ஒரு மரபார்ந்த, தொன்மைமிக்க பௌத்த தளம் (ஆங்கிலம்: Buddhist heritage site) கண்டறியப்பட்டது. இந்தக் களம் ஆந்திர பிரதேச மாநில தொல்லியல் துறையால் (ஆங்கிலம்: State Archaeological Department of Andhra Pradesh) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இக்குன்று இரண்டு மேல்மட்ட சமதளங்களால் (ஆங்கிலம்: flat terraces) ஆனது. கிழக்கு நோக்கிய சமதளத்தில் புத்த தூபியின் (ஆங்கிலம்: Buddhist Stupa) எச்சங்களும், ஒரு சிறிய பாறையில் வெட்டப்பட்ட தொட்டியும் உள்ளன. மேற்கு நோக்கிய சமதளத்தில் புத்த விகாரையின் எச்சங்களும், துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு இந்து கோவில்களும் (100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம்) உள்ளன. மலையின் மேற்கு முனையில் கோஸ்தானி நதியை நோக்கி பாறையில் வெட்டப்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. இத்தலம், அருகாமையில் உள்ள பவுரல்லகொண்டா (ஆங்கிலம்: Pavurallakonda) மற்றும் தோட்லகொண்டா (ஆங்கிலம்: Thotlakonda) பௌத்த தளத்துடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இக்களம் பீமுனிப்பட்டினத்திலிருந்து (ஆங்கிலம்: Thotlakonda) ஆறு கிமீ தொலைவில் உள்ளது. குடிவாடா திப்பா பௌத்த தலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் வணிக நகரமான தகரபுவலசா (ஆங்கிலம்: Thagarapuvalasa) மற்றும் சிட்டிவலசாவிற்கு (ஆங்கிலம்: Chittivalasa) மிக அருகில் உள்ளது.
காட்சியம்
தொகு-
குடிவாடா திப்பாவில் உள்ள தூபியின் செங்கல் உருவரை
-
குடிவாடா திப்பாவில் பாறையில் வெட்டிய படிகள்
-
குடிவாடா திப்பாவில் மேல்மட்ட சமதளத்தின் காட்சி
-
குடிவாடா திப்பாவில் பாறையில் வெட்டப்பட்ட தொட்டி
-
குடிவாடா திப்பாவில் செங்கல் இடிபாடுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ B. Madhu Gopal (2012-10-09). "Evidence of Buddhist site found". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.