குடும்பர் (Kudumbar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.[1] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் (எண் 35) உள்ளனர்.[2][3] இவர்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4] குன்றிலிருந்து இறங்கி இடையனாகி, இடையிலிருந்து பள்ளத்துக்கு வந்து அமர்ந்ததால் பள்ளன் ஆனான். நிலம் திருத்தி நீர் பாய்ச்சி முதல் வேளாண் குடி ஆனான். ஆணும் பெண்ணும் இணைந்து முதல் குடும்பத்தை உருவாக்கி குடும்பனானான். இங்குதான் முதல் சமுதாயம் உருவாயிற்று.

குன்றுப் பகுதி (குறிஞ்சி), இடைப்பகுதி (முல்லை), பள்ளம் (மருதம்) ஆகியவற்றிலருந்து நகர்ந்து கடலோர வாழ்க்கைக்கு (நெய்தல்) நகர்ந்தான். பின்னர் பாலைவன (பாலை) பகுதிக்குச் சென்றான் மனிதன். மனிதன் ஒரு சமூக விலங்கு, இங்கு எல்லாமே காரணப் பெயர்கள் மட்டுமே.

சொற்பிறப்பு

தொகு

குடும்பன் என்பதற்கு பள்ளர் தலைவர்[5] என்று பொருள் மற்றும் குடும்ப தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்

தொழில்

தொகு

இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[6]

மக்கள் தொகை

தொகு

1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி 45,233 பேர் உள்ளனர் அதில் ஆண்கள் 22, 638 பேரும், பெண்கள் 22595 பேரும் உள்ளனர் [7]

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழர் பண்பாட்டு வரலாறு (in ஆங்கிலம்). தமிழர் பண்பாட்டு சமூக ஆய்வு மையம். 1999.
  2. "http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Scan-0017.jpg". {{cite web}}: External link in |title= (help)CS1 maint: url-status (link)
  3. "Tamil Nadu". Ministry of Social Justice. 2017. Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-20.
  4. C.P.சரவணன், C.P.சரவணன் (20 அக்டோபர் 2019). தேவேந்திர குல வேளார்கள் பட்டியல் வெளியேற்ற தாமதத்திற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா? (in ஆங்கிலம்). தினமணி.
  5. தமிழ்ச் சொல்லகராதி (in ஆங்கிலம்). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2003. {{cite book}}: |first= missing |last= (help); Unknown parameter |Page= ignored (|page= suggested) (help)
  6. Singh, Kumar Suresh (1992). People of India:India's communities,Volume 4 (in ஆங்கிலம்). Anthropological Survey of India. p. 793. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195633547.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography (in ஆங்கிலம்). Global Vision Pub House.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பர்&oldid=4078956" இலிருந்து மீள்விக்கப்பட்டது