குடும்பிமலை

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

குடும்பிமலை[1] மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கில் அமைந்துள்ள ஓர் பிரதேசமாகும். இப்பகுதி அடர்ந்த காடுகளும் மலைக் குன்றுகளையும் உடையது. பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சனத்தொகை 1,261 ஆகும்.[2]

குடும்பிமலை
குடும்பிமலைக் குன்று
கிராமம்
குடும்பிமலை
குடும்பிமலை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று தெற்கு

இங்கு உள்ள குன்று குடுமி வடிவில் காணப்படுவதால் இப்பகுதி குடும்பிமலை எனப் பெயர் பெற்றதென்பர். பிரித்தானியர் காலத்தில் இக்குன்று பாரன் தொப்பி (Baron's Cap) என அழைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிக்குன்றாக குடும்பிமலை காணப்படுவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் உயரமான மலைச் சிகரமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் அமைந்த தொப்பிக்கல் மலையின் லிண்டகல எனும் சிகரம் காணப்படுகின்றது.

இதனையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Will Tamil Kudumbimalai Be Turned into Sinhalese Thoppigala Soon?". SangamOrg. 2007-07-14. http://www.sangam.org/2007/07/Kudumbimalai.php?uid=2476. பார்த்த நாள்: 2008-12-26. 
  2. "Statistical Information, 2010". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பிமலை&oldid=3701436" இலிருந்து மீள்விக்கப்பட்டது