குடும்பிமலைச் சண்டை

நான்காம் ஈழப்போரின் ஒரு பகுதி

மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கரடியானாறு, புல்லுமலை, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இலங்கை விமானப்படையின் கிபிர் குண்டுவீச்சுவிமானம் குண்டுகளை வீசிவருகின்றது. தவிர சத்துருகொண்டான், மட்டுநகர், புதூர், பிள்ளையாரடி,ஒட்டமாவடி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்களிருந்து தொடர்ச்சியாக செக் நாட்டுப் பல்குழற் பீரங்கிகள், ஆட்டிலறி மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதால் மட்டக்களப்பு நகரப்பகுதி அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

குடும்பிமலைச் சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 25 ஏப்ரல் – 11 யூலை 2007
இடம் குடும்பிமலை, இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
Gen. சரத் பொன்சேகா,
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய
சுவர்ணம் / ரமேஷ்
பலம்
ஏறத்தாழ 1,200 ஏறத்தாழ 1,000
இழப்புகள்
48 பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை இராணுவத்தின் கூற்றுப்படி)[சான்று தேவை] 700–800 பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை இராணுவத்தின் கூற்றுப்படி)[சான்று தேவை]

பெப்ரவரி 27 ல் இத்தாலிய, அமெரிக்க இராஜதந்திரிகள் மட்டக்களப்பு வந்திறங்கியபோது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இலங்கை இராணுவத்தால் புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்கள் நோக்கி மூர்க்கத்தமாக குண்டுகளை வீசிவருகின்றது. மேலும் தரைவழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறவும் முயற்சிக்கின்றது.[1][2][3]

40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பெரும்பாலும் உடுத்த உடையுடனேயே மட்டக்களப்பு நகரப்பகுதியை சார்ந்த பிரதேசங்களான புதூர், கள்ளியங்காடு, பிள்ளையாரடி போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போதுள்ள நலன்புரி நிலையங்கள் இவர்களால் நிரம்பி வழிகின்றன. மட்டு அரச அதிபர் திணைக்களம் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உட்படப் பல்வேறு அமைப்புக்களும் உதவியை ஆரம்பித்துள்ளபோதும் தொடர்ந்துவரும் யுத்த சூழ்நிலைகாரணமாக உதவிவழங்குவதில் தாமதமேற்படுகின்றது.

கம்பிவழி தொலைபேசி தவிர்ந்த எனைய நகர்பேசி மற்றும் CDMA சேவைகள் 6 மார்ச் 2007 இல் இருந்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால், உதவி வழங்குதலில் ஐக்கிய நாடுகள் (சொந்த வானொலித் தொடர்பாடல் வலையமைப்பைப் கொண்டுள்ளதால்) தவிர்ந்த ஏனைய அமைப்புக்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் தெரிகின்றது.

குடும்பிமலை வீழ்ச்சி வெற்றி விழா - 'கிழக்கின் உதயம்'

தொகு

குடும்பிமலை முகாம் வீழ்ச்சியை இலங்கை அரசு ஒரு வெற்றி விழாவாக ஜூலை 19, 2007 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியது. அங்கு அப்போதைய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா கிழக்கின் வெற்றியை பொறித்த பட்டயம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அளித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி புலிகளின் ஈழக்கனவை சிதைத்துவிட்டதாகவும், 2007 வருட முடிவிற்குள் கிழக்கில் மாகாண மாவட்ட தேர்தல்கள் நடைபெறும் என்றும், முழுவீச்சுடன் பொருளாதார வளர்ச்சிப் பணிகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். இவ்விழாவை பிரதான எதிர்கட்சி,ஜேவிபி மற்றும் தமிழ்கூட்டமைப்பு என்பன புறக்கணித்திருந்தன. [4]


வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Salgado, Upali (8 July 2007). "Thoppigala: A land of many wonders". The Sunday Times. Archived from the original on 6 January 2009. பார்க்கப்பட்ட நாள் 7 February 2009.
  2. Noyahr, Keith (29 July 2007). "Peace accord did not fail: Gen. Kalkat". The Nation. பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
  3. Handunnetti, Dilrukshi (19 August 2007). "Human rights violations are unacceptable". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 14 February 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rajapaksa slams International Community at 'Thoppigala' ceremony
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பிமலைச்_சண்டை&oldid=4017259" இலிருந்து மீள்விக்கப்பட்டது