குடும்ப வன்முறை

குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது. துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.

தமிழ்ச் சூழலில் குடும்ப வன்முறை

தொகு

இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர்.[1] ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்ப_வன்முறை&oldid=3455560" இலிருந்து மீள்விக்கப்பட்டது