குடுவையாறு

குடுவையாறு (Guduvaiyar River) (சில நேரங்களில் குடுவையர் என்று உச்சரிக்கப்படுகிறது) தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாய்ந்து புதுச்சேரி ஒன்றியப் யூனியன் பிரதேசத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இந்த ஆற்றுநீர் கீழூரில் கட்டப்பட்ட அணையில் தேக்கப்பட்டு பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]

இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே நீரோடையாகத் தோன்றுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் அதிக வெள்ளம் காணப்படும். இந்த ஆற்றின் போக்கில் சில படுக்கை அணைகள் உள்ளன. கீழுரில் உள்ளது இவற்றுள் முக்கியமானது. இந்த ஆறு சங்கராபரணி ஆற்றுடன் (தேசிய நெடுஞ்சாலை எண்-45 ஏ) அரியாங்குப்பத்தில் சுண்ணாபார் பாலம் அருகே இணைகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மாநில எல்லையை உருவாக்குகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடுவையாறு&oldid=3846556" இலிருந்து மீள்விக்கப்பட்டது