குட்டுவன் சேரல்

குட்டுவன் சேரல் பதிற்றுப்பது ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனின். மகன். ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவனைப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். இவற்றைப் பாடிய புலவர் பரணர். புறநானூற்றுப் பாடலில் கபிலர் குட்டுவனிடம் களிறுகளைத் தனக்குப் பரிசாக வழங்கும்படி கேட்கிறார். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பாடல்களைப் பாடியதற்காக அரசன் உம்பற்காட்டு வருவாய் முழுவதையும் தொடர்ந்து புலவர்க்கு வழங்கியதோடு, தன் மகன் குட்டுவன் சேரலையும் வழங்கினான். இதனால் குட்டுவன் சேரல் வாழ்நாள் பரணருக்குத் தொண்டு செய்யும் வாழ்க்கையாக முடிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டுவன்_சேரல்&oldid=2564832" இலிருந்து மீள்விக்கப்பட்டது