குணசாகரர், இலக்கண நூலுக்கு உரை செய்த ஆசிரியர்களில் ஒருவர்.[1] 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமிர்தசாகரரின் மாணவர் இவர். தன் ஆசிரியர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை நூல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார். இருவரும் சமண மதத்தவர்.

உரையின் ஒரு பகுதி – எடுத்துக்காட்டு

இந் நூலால் பயன் யாதோ எனின், யாப்பாராய்தல் பயன். யாப்பாராயவே பா, தாழிசை, துறை, விருத்தங்களால் ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் இவற்றின் மெய்மை அறிந்து, விழுப்பம் எய்தி, இம்மை மறுமை வழுவாமல் திகழ்வர். அதனால் இருமைக்கும் உறுதி பயப்பது யாப்பு எனக் கொள்க.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் குணசாகரர் இயற்றிய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை பதிப்பு, 1965

அடிக்குறிப்பு

தொகு
  1. குணக்கடல் பெயரோன் - என்று இவரது பெயரை யாப்பருங்கலம் நூலின் பாயிரப் பாடல் குறிப்பிடுகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணசாகரர்&oldid=3448177" இலிருந்து மீள்விக்கப்பட்டது