குணா குகை

தமிழ்நாட்டின் கொடைக்கானலிலுள்ள ஒரு குகை

குணா குகைகள் (Guna Caves) (டெவில்ஸ் கிச்சன் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ள ஒரு குகையாகும்.[1] இந்த இடம் ஒவ்வொரு ஆண்டும் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது.[2] 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம் இங்கு படமாக்கப்பட்டதால் இதன் தற்போதைய பெயரைப் பெற்றுள்ளது.[3] இதைத் தொடர்ந்து, மோகன்லால் நடித்த மலையாளத் திரைப்படமான ஷிக்கர் (2010),[4][5] மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் (2024) ஆகியவற்றின் இறுதிக்கட்டக் காட்சிகள் உட்பட மற்ற படங்களும் இங்கு படமாக்கப்பட்டன. இது குகையில் நடந்த உண்மையான விபத்தை அடிப்படையாகக் கொண்டது.[6] குகைக்குள் பலர் காணாமல் போயுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளால் உடல்களை மீட்க முடியவில்லை. 2016ஆம் ஆண்டு வரை, உடல்கள் மீட்கப்படாமல் குகை தொடர்பாக 16 பேர் காணாமல் போனதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.[7]

வரலாறு

தொகு

இந்தக் குகை 1821-இல் பிரித்தானிய அலுவலர் பி. எஸ். வார்ட் என்பவரால் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 1990கள் வரை வெளி உலகுக்கு தெரியாத நிலையில் இருந்தது.[8]

2000களின் நடுப்பகுதியிலிருந்து 2016 வரை, அதிகரித்து வரும் தற்கொலைகள் காரணமாக குகை பொதுமக்கள் பார்வைக்கு மூடப்பட்டது. இருப்பினும், தமிழ் நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய படத்தின் சரியான இடத்தைப் பார்க்க மக்கள் இந்த மூடுதலை அடிக்கடி எதிர்த்தனர். இங்கு 275 மீட்டர் ஆழத்தில் ஆபத்தான ஓட்டை இருப்பதை அறியாமல் அதில் விழுந்து 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2006ஆம் ஆண்டில், ஒரு நபர் குழிக்குள் விழுந்தார். இவர் மட்டுமே குகைக்குள் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டவர் ஆவார். 2016ஆம் ஆண்டில், உட்காரும் வசதிகள் மற்றும் குடிநீர் நிலையங்களைச் சேர்க்கும் திட்டத்துடன் குகைக்கான பாதை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் குகையின் நுழைவாயில் தற்போது மூடப்பட்டுள்ளது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "'Manjummel Boys' : Everything to know about The Guna Caves aka 'The Devil's Kitchen'". The Times of India. 2024-02-09. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/everything-to-know-about-the-guna-caves-aka-the-devils-kitchen/articleshow/107549529.cms. 
  2. "All About Kodaikanal, Tamil Nadu's Scenic Hill Station". Outlook Traveller (in ஆங்கிலம்). 2023-09-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
  3. "Here Is The Real-Life Story Behind Guna Caves That Inspired Malayalam Movie Manjummel Boys". IndiaTimes (in Indian English). 2024-02-22. பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
  4. TOI Entertainment Desk (29 February 2024). "When Mohanlal referred to Guna caves as 'Nature's mortuary'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mohanlals-shikkar-guna-caves-natures-mortuary/articleshow/108101592.cms. 
  5. "ഗുണ കേവിലിറങ്ങാൻ മോഹൻലാലും അനന്യയുമെടുത്ത റിസ്ക്: അനുഭവം പറഞ്ഞ് എം. പത്മകുമാർ". www.manoramaonline.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-02.
  6. "'Manjummel Boys' : Everything to know about The Guna Caves aka 'The Devil's Kitchen'". The Times of India. 2024-02-09. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/everything-to-know-about-the-guna-caves-aka-the-devils-kitchen/articleshow/107549529.cms. 
  7. Vannan, Gokul (2016-09-11). "Guna cave' in Kodai to be opened after 10 years". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
  8. "Devil's Kitchen | Tamil Nadu". Tamilnadu Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
  9. Vannan, Gokul (2016-09-11). "Guna cave' in Kodai to be opened after 10 years". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணா_குகை&oldid=3903663" இலிருந்து மீள்விக்கப்பட்டது