குண்டடம்
தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம்
குண்டடம் (Kundadam) என்பது தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிட ஊராகும். இது தாராபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. [1] கொங்கு நாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றாகத் திகழும் பொங்கலூர்கா நாட்டிற்குட்பட்ட 27 ஊர்களுள் குண்டடம் ஊரும் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வூர் பழைய நூல்களில் குன்றை, குன்றாபுரம், குன்றை மாநகர், குன்றிடம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது.[2]
வழிபாட்டுத் தலங்கள்
தொகு- குண்டடம் வரதராசப்பெருமாள் கோயில்
- குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில்
- வடிவுடைமங்கை உடனுறை கொங்குவிடங்கீசுவரர் கோயில்
- குண்டடம் கொங்கர் சின்னம்மன் கோயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kundadam". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2019.
- ↑ முனைவர்.கா.நாகராசு (ஜனவரி 2017). "குண்டடம் திருத்தல வரலாறு". சிவசாந்தலிங்கர் 20 (5): 20.