குண்டாறு அணை

குண்டாறு நீர்த்தேக்கம்

குற்றாலத்தைச் சுற்றியுள்ள எண்ணற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று குண்டாறு அணைப் பகுதி

குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கம் சீசன் சமயங்களில் நிறைந்து விடும், தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிக்க அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளுடன் சென்று குளிக்கக் கூடிய இடமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகே நிறைய தனியார் அருவிகள் உள்ளன. தனியார் அருவி என்பது, தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் பாய்ந்து வரக்கூடிய தண்ணீர் அருவியாக கொட்டும் இடங்களில் எந்த நெரிசலும் இல்லாமல் குளிக்கலாம். அதற்கு அந்த தனியாரிடம் அனுமதி பெற வேண்டும். சில அருவிகளில் குளிப்பதற்கு கட்டணம் கூட வசூலிக்கிறார்கள். ஆனால், மக்கள் நெரிசல் இல்லாமல் அருவியின் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பது அதன் சிறப்பு.

இந்த அணைப்பகுதியில் நின்று கொண்டு பார்த்தால் எல்லா திசைகளிலும் மலை, மலை, மலையே. பச்சை பசேல் என்று கண்ணிற்குக் குளிர்ச்சியாயும், இதமாக வீசும் குளிர்க்காற்றும், எப்போது இங்கு சென்றாலும் இனிதே கிடைக்கும் சுகமாகும்.

மலைகளால் சூழப்பட்டுள்ள இந்தப் பகுதியில் ஒரு பெரும் அணையைக் கட்டி நீர்த்தேக்கி, குற்றாலப் பகுதியின் பாசன வளத்தைப் பெருக்குவதர்காக திட்டமிடப்பட்டது, எனவே ஒரு பெரும் அணை இருக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இன்று பார்க்கும் இந்த தடுப்பணை மட்டுமே கட்டப்பட்டது என்று அங்குள்ளவர்கள் கூறினர்.

அப்படி ஒரு பெரும் அணை கட்டினால் தங்களுடைய சொத்துக்கள் மூழ்கிவிடும் என்பதற்காக அன்றிருந்தவர்கள் தடுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

மழைப் பொழியும் காலத்தில் இங்கு பெருமளவிற்கு தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ளது நன்கு தெரிந்தது. வரலாறு எதுவாயினும் அப்பகுதியின் இயற்கை செழிப்பும், எழிலும் குன்றாமல் இருக்கிறது.

ஒரு கி.மீ. தூரத் தடுப்பணையும் அதன் முடிவில் நீரைத் திறந்துவிட மதகும் கட்டப்பட்டுள்ளது. அணையின் மறு பகுதிக்குச் சென்றால் மேலும் குளிர்ச்சியாக இருக்கிறது.

காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் இந்த அணைப் பகுதிக்குச் செல்லலாம்.

இந்த அணைப் பகுதிக்கு அருகில் ஒரு அருவியும் உள்ளது. குற்றாலத்தில் நீர்ப் பெருகும் காலத்தில் இந்த அருவியிலும் நீர் கொட்டும்.

இந்த அணைப் பகுதியிலும், கேரள எல்லைப் பகுதியிலும் ஒரு சிறு வகை பலாப்பழம் கிடைக்கிறது. அந்தப் பலாப் பழத்தை சாப்பிட்டுப் பாருங்கள். அதன் ருசியை கொண்ட முக்க‌னிகளில் ஒன்றாக பலா தமிழர் வாழ்விலும் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளதை அறிவீர்கள். தேன் பழமாகி விட்டதோ என்று கருதும் அளவிற்கு அதன் ருசி மிகச் சுவையானது.

குற்றாலத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலுள்ளது அழகிய இந்த அணைப் பகுதி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டாறு_அணை&oldid=2723865" இருந்து மீள்விக்கப்பட்டது