குண்டா மல்லேசு

இந்திய அரசியல்வாதி

குண்டா மல்லேசு (Gunda Mallesh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் சூலை மாதம் 14 ஆம் தேதியன்று அடிலாபாத்து மாவட்டம், தந்தூர் மண்டல், இரெச்சினி கிராமத்தில் இவர் பிறந்தார். ஆந்திரப்பிரதேச அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 1983, 1985 மற்றும் d 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று ஆந்திர பிரதேச சட்டமன்றத்தில் ஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

குண்டா மல்லேசு
Gunda Mallesh
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்துர்கம் சின்னையா
தொகுதிபெல்லம்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி
பதவியில்
1994–1999
முன்னையவர்தாசரி நரசய்யா
பின்னவர்பட்டி சுபத்ரா
பதவியில்
1985–1989
பதவியில்
1983–1985
முன்னையவர்தாசரி நரசய்யா
பின்னவர்தாசரி நரசய்யா
தொகுதிஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-07-14)சூலை 14, 1947
இரெச்சினி கிராமம், தந்தூர் மண்டல், அடிலாபாத் மாவட்டம்
இறப்புஅக்டோபர் 13, 2020(2020-10-13) (அகவை 73)

மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, மல்லேசு லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தார். ஓட்டுனர்களின் உரிமைக்காகப் போராடினார். பின்னர் சிங்கரேணி சுரங்க நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட குண்டா மல்லேசு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று தனது 73 ஆவது வயதில் இறந்தார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Veteran CPI leader Gunda Mallesh passes away at 73 in Hyderabad". The News Minute (in ஆங்கிலம்). 2020-10-13. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  2. "Former CPI MLA Gunda Mallesh dies of kidney-related ailments". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டா_மல்லேசு&oldid=3847803" இலிருந்து மீள்விக்கப்பட்டது