குண்டுச்சம்பா (நெல்)
இந்திய, இலங்கை நெல்வகை
குண்டுச்சம்பா (Gundu Samba) அல்லது, வட்டார வழமையில் மிளகி (Milagi)[1] எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[2]
குண்டுச்சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
மருத்துவ குணம்
தொகுகுண்டு சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், நாவறட்சியைப் போக்கும். ஆனாலும் இதன் கரப்பான் எனும் பிணியை உண்டாக்குவதோடு, பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.[3]
அகத்தியர் குணபாடம்
தொகுகுண்டுச்சம் பாவரிசி கொண்டுண்ணும் பேர்களுக்குப்
பண்டையில்லா மந்தநோய் பாரிக்கும் – அண்டுபடாத்
தாகமெல் லாமொழியும் தையலே ! வன்கரப்பான்
தேகமெல் லாம்பரவுஞ் செப்பு.
- பொருள்: மேற்கூறிய பாடலின் பொருளானது, இந்த குண்டுச்சம்பா அரிசியை உண்டவனுக்கு இதனால் பசித்தீ கெடும். கரப்பான் உண்டாகும். நீர்வேட்கை போகும். என கூறப்படுகிறது.[4]
தொன்மை குறிப்பு
தொகுகுதிரைகட்டி ஐலேலப்படி சேர்க்குழச்சு
- குண்டுச்சம்பா ஐலேலப்படி நாத்துநட்டு
ஐலேலப்படி நாத்துநட்டோ ஆளுகளே
- ஐலேலப்படி கூப்பிடுங்க பிரியமின்னா...
- மேற்கூறிய இப்பாடல் அக்காலப் பெண்கள் நாற்று நடும் வேளையில், களைப்பாற பாடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பது மூலாதாரத்தில் உள்ளது.[5]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ [http://www.tn.gov.in/rti/proactive/cfcp/control_orders_part4_manual3/paddy_rice_procurement_levy.pdf THE NAMES OF VARIETIES FALLING UNDER DIFFERENT CLASSIFICATIONS ARE AS SHOWN UNDER - COMMON]
- ↑ "Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |16 Naming traditional rice varieties" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
- ↑ "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்). 2017. Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
- ↑ "சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
- ↑ 11_chapter 5.pdf பக்கம்: 168 - இயல் நான்கு - பண்ணைப்பாடால்களும், சாதி இறுக்கங்களும்