குண்டெறியம்

  குண்டெறியம் (Bombard) என்பது ஒரு வகை தெறுவேயம் அல்லது கணையெக்கி ஆகும், இது இடைக்காலம் மற்றும் புத்தியல் காலத்தின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. குண்டெறியங்கள் முக்கியமாக பெரிய குழல்விட்டம் கொண்ட, முகவாய் தாணிக்கும் சேணேவித் துண்டுகளாக இருந்தன, அவை எதிரிகளின் கோட்டைகளின் சுவர்களில் வட்டக் கல் எறிபொருள்களைச் சுட பயன்படுத்தப்பட்டன, படையினரை உடைக்க உதவியது. பெரும்பாலான குண்டெறியங்கள் இரும்பினால் செய்யப்பட்டன மற்றும் எறிபொருள்களைச் சுட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. மோன்சு மெக், மா துருக்கி குண்டெறியம் மற்றும் கை-குண்டெறியம்  உள்ளிட்ட குண்டெறியங்களுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ரோட்ஸ் , ஜெருசலேமின் செயிண்ட் ஜானின் குதிரைப்படை வீரர்ககுண்டெறியம் கணையெக்கி மற்றும் கருங்கல் குண்டு எறிபொருள், 1480 – 1500. பியர் டி ஆபுசனின் வேண்டுகோளின் பேரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டெறியமானது ரோட்ஸ் முற்றுகையில் சுவர்களை (100 – 200 மீட்டர்) நெருக்கமான வலுவெதிர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. இது 260 கிலோ கருங்கல் குண்டுகளை வீசியது. இந்தக் குண்டெறியம் சுமார் 3,325 கிலோ எடை கொண்டது. மியூசி டி எல் ஆர்மி .

இந்த ஆயுதம் இரோயல் சேணேவியின் தரநிலையின் Bombardier (குண்டெறிஞர்) இற்கான பெயரையும் bombardment (குண்டுவீசுகை) என்ற சொல்லையும் வழங்கியது.

சொற்கூறு தொகு

"bombard" என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எந்த வகையான சுடுகலன்களையும் விரித்துரைக்கப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் பின்னர் இது 14 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளில் பெரிய தெறுவேயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. [1] பெரிய பீரங்கிகளுடனும் அதன் வலுவான தொடர்பு இருந்தபோதிலும், குண்டெறியங்களுக்கு செந்தரப்படுத்தப்பட்ட அளவு இல்லை, மேலும் இந்த சொல்லானது ஒரு மீட்டர் நீளம் மற்றும் பல மீட்டர் நீளமுள்ள 20 தொன் வரை எடையுள்ள தெறுவேயங்களுக்கும் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. [2]

சொற்பிறப்பியல் தொகு

இதற்காண தமிழ்ச்சொல்லான 'குண்டெறியம்' என்பது மூன்று சொற்களால் - குண்டு + எறி + அம் - உருவான ஒரு கூட்டுச் சொல்லாகும். குண்டு - குண்டான உருண்டை; எறி - எறிதல்; அம் - ஒரு கருவிப்பொருளீறு. இது பெரும்பாலும் பெரியது என்னும் பொருளினை உணர்த்தும் . மொத்தமாக, ஒரு குண்டினை எறியும் படைக்கலம் என்னும் பொருளில் தமிழில் வருகிறது.

காட்சிக்கூடம் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  •   இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bombard". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  • Andrade, Tonio (2016), The Gunpowder Age: China, Military Innovation, and the Rise of the West in World History, Princeton University Press, ISBN 978-0-691-13597-7.
  • DeVries, Kelly (2012), Medieval Military Technology
  • Sands, Kathleen. "Though One Of The Best-Documented Of Medieval Bombards, Mons Meg Was The Subject Of Exaggeration And Legend." Military History 16.3 (1999): 22.
  • Lu Gwei-Djen, Joseph Needham and Phan Chi-Hsing. Technology and Culture, Vol. 29, No. 3 (Jul., 1988), pp. 594–605
  • W. H. Finlayson. The Scottish Historical Review, Vol. 27, No. 104, Part 2 (Oct., 1948), pp. 124–126
  • Cvikel, Deborah, and Haim Goren. "Where Are Bonaparte's Siege Cannon? An Episode In The Egyptian Campaign." Mediterranean Historical Review 23.2 (2008): 129–142.

மேலும் படிக்க தொகு

  • Smith, Robert Douglas; DeVries, Kelly (2005), The artillery of the Dukes of Burgundy, 1363–1477, Boydell Press, ISBN 978-1-84383-162-4
  1. Andrade 2016, ப. 83.
  2. DeVries 2012, ப. 155.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டெறியம்&oldid=3394528" இருந்து மீள்விக்கப்பட்டது