குத்தகை
வயல், கட்டிடம், காலி மனை, தோட்டம் முதலானவற்றை குறிப்பிட்ட காலவரையுடன், வாடகை முறையில் அனுபோகத்திற்கு வழங்குதலே குத்தகைக்கு விடுதல் எனப்படும்.[1] இலாபந்தரும் ஒரு செயற்பாட்டை அதன் உரிமையாளரிடமிருந்து பணத்துக்கு வாடகைமுறையில் பெற்று அதை செயற்படுத்துவதன் மூலம் வருமானம் பெறுதலை குத்தகை முறை எனலாம்.
அரசு மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமான ஆட்சிக்கு உட்பட்ட சந்தை, வாகனப் பாதுகாப்பிடம், மற்றும் மேச்சல்தரை முதலானவற்றை குத்தகைக்கு விடுகின்றன. அதனை செயற்படுத்துவதன் மூலம் குத்தகைக்காரர் இலாபம் ஈட்டுவார்.