குத்தூசி (இதழ்)

குத்தூசி 1964 இல் சா. குருசாமியை ஆசிரியராகக் கொண்டு இந்தியாவில் சென்னையிலிருந்து வெளிவந்த தமிழ் சிற்றிதழ் (மாதஇதழ்) ஆகும். பகுத்தறிவுக் கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த இந்த இதழ் தமிழ் நூல் நிலையம் என ஒன்றை அமைத்து நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் 1964 இல் தொடங்கிய அறிவுப்பாதை என்ற சுயமரியாதை இயக்க வார ஏடு பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. கோட்டோவியம், தலையங்கம், துணுக்குகள், கட்டுரைகள், அறிவியல் என அனைத்திலும் பகுத்தறிவுக் கருத்துகளை நுட்பமாக விதைத்துள்ளது. 1964 அக்டோபர் மாத வெளியிடு குத்தூசியின் மூன்றாவது ஆண்டுத் தொடக்க இதழாக மலர்ந்துள்ளது. இதழில் பண்டைக்கால தமிழக நாணயங்கள் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. பேனா மன்னர்கள் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் எழுதியுள்ளது. விளம்பர வணிக நோக்கமின்றி பகுத்தறிவுக் கருத்து விதைப்பிற்காகத் தொடர்ந்த இதழிது.

1964-ல் குத்தூசி இதழ் அட்டை

இது மக்களிடையே பதிந்து கிடக்கிற அறியாமையை சுட்டிக்காட்டி வென்றெடுக்க, கட்டுரை, கவிதை, துணுக்குகள் வழி செறிவாகப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தூசி_(இதழ்)&oldid=1602113" இலிருந்து மீள்விக்கப்பட்டது