குந்தா ஆறு

குந்தா ஆறு நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைகள் வழியே ஓடும் ஆறாகும். தேவபெட்டா, கரைக்கடா, கௌலின் பெட்டா, போர்த்திமந்து என்ற 8000அடி உயரமலைகளினிடையே ஓடும் அவலாஞ்சி மற்றும் எமரால்டு காட்டாறுகள் சேர்ந்து குந்தா ஆறு உற்பத்தியாகிறது. 6000 அடி உயரத்தில் சில்ல அள்ளா என்ற ஆறும், அதன்கீழே கனர அள்ளா, கௌளி முளி அள்ளா, பெகும்ப அள்ளா என்ற சிற்றாறுகளும், குந்தாவுடன் இணைகின்றன. குந்தா ஆறு இறுதியல், பவானியில் கலக்கிறது. இங்கு, தமிழக மின் துறைக்குச் சொந்தமான, இரண்டு அணைகள், மேலும், கீழும் உள்ளன. இதனால் குந்தா நீர்மின்னாக்கத் திட்டம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தா_ஆறு&oldid=2469321" இருந்து மீள்விக்கப்பட்டது