குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்
தமிழகத்தின் உள்ள நீலகிரிமாவட்டத்தில் அமைந்துள்ள குந்தா நீர்மின்னாக்கத் திட்டம், காமராசர் அரசால் நீலகிரி மலைகளிலிருந்து வரும் குந்தா ஆற்றில் கட்டப்பட்டது.[1] இத்திட்டத்தின் கீழ் ஐந்து மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் உற்பத்தியாகக் கூடிய மின்சக்தியின் மொத்த அளவு ஏறத்தாழ 500 மெகா வாட் ஆகும். ஒரு மெகாவாட் என்பது 10 இலட்சம் யூனிட்டுகளை கொண்டதாகும். கொழும்புத் திட்டத்தின்கீழ் இந்தியா, கனடா நாடுகளின் கூட்டுறவால் இப்பெரிய திட்டம்[2]உருப்பெற்றது.
இத்திட்டத்திற்காக கனடா அரசு 4.3 கோடி டாலர்கள் நிதி உதவி அளித்தது. கனடாவின் இவ்வுதவிக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் ஐந்து மின்னாக்க நிலையங்களுக்கும் கனடா மின்னாக்க நிலையங்கள் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]
குந்தா ஆறு
தொகுஅவலாஞ்சி, எமரால்டு என்னும் இரண்டு காட்டாறுகள் தேவபெட்டா, கரைக்கடா, கௌலின் பெட்டா, போர்த்திமந்து என்ற 8000அடி உயரமலைகளினிடையே ஒடி ஒன்றாகக் கலந்து குந்தா ஆறு என்ற பெயரினைப் பெறுகிறது.
6000 அடி உயரத்தில் சில்ல அள்ளா என்ற ஆறும், அதன்கீழே கனர அள்ளா, கௌளி முளி அள்ளா, பெகும்ப அள்ளா என்ற சிற்றாறுகளும், குந்தாவுடன் இணைகின்றன. குந்தா ஆறு இறுதியில், பவானியில் கலக்கிறது.
அமைவு
தொகுஅவலாஞ்சி எமரல்டு ஆகியவற்றின் குறுக்கே அணையிட்டுத் தேக்கப்பெற்ற நீர்ப்பிடிப்பின் மொத்த அளவு 550 கோடி கன அடி ஆகும். மேல் பவானியில் கட்டப்பட்டுள்ள அணையின் தேக்கம் 357.2 கோடி கனஅடி ஆகும். அவலாஞ்சி, எமரல்டு தேக்கங்களை 2367 அடி நீளமுள்ள சுரங்க வாய்க்கால் ஒன்றிணைக்கின்றன. இதைப் போலவே, மின்னாக்க நிலையங்களுக்குத் தண்ணீரைச் செலுத்தும் பொங்கு தொட்டிகளையும், நீர்த் தேக்கங்களையும் சுரங்க வாய்க்கால்களே இணைக்கின்றன.
பயன்கள்
தொகுஇத்திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமானது, துடியலூர், சேலம், ஈரோடு, மதுரை, வில்லிவாக்கம்ஆகிய ஊர்களிலுள்ள அடிமின்நிலையங்களுக்கு 10, 230 கிலோ வோல்ட் கம்பிகளின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.இவ்வணையால் மலைவாழ் மக்களின் உழவுத்தொழிலுக்கும், வீடுகளுக்கும் மின்சாரமும், நீரும் கிடைக்கிறது. மேலும், சில தொழிற்சாலைகளும் பயன்பெறுகின்றன.
மூன்றாம் மின்னாக்க நிலையத்தின் உருளைகளை, இயக்கிச் செல்லும் கழிவு நீரும் வீணாகமல் இருக்கத் திட்டமிட்டுள்ளனர்.பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள வெங்கட்டராமன் அணையில் (பில்லூர்)தேக்கப்பட்டு, அது மேலும், இரண்டு மின்னாக்க நிலையங்களை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது.
வெங்கட்டராமன் அணை கல்லினால் கட்டப்பட்டது. அணையின் மேற்புற நீளம் 1170 அடி:அகலம் 21 அடி. மேலே வண்டிப் பாதை ஒன்றினையும் அமைத்துள்ளனர். இத்தேக்கத்துக்குள் பாயும் நீர், சுமார் 460 சதுரமைல் பரப்பிலிருந்து வடிந்து வருகின்றது. தேக்கம் மொத்தம் 156.8 கோடி கனஅடி நீரைக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "HYDRO ELECTRIC SYSTEMS". nilgiris.tn.gov.in. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.
- ↑ http://www.commonlii.org/in/other/treaties/INTSer/1956/21.html
- ↑ "Generation-Kundah". TANGEDCO, Tamil Nadu State government. Archived from the original on 22 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 June 2012.