குநோம்
கணினிப்பயன்பாட்டுக்கான வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழல்களுள் குனோம் (GNU Object Model Environment - GNOME) புகழ்பெற்ற ஒன்றாகும். இது GNOME என்றவாறு எழுதும்போது பாவித்தாலும் குனோம் என்றவாறே உச்சரிக்கப்படும்.[2]
குநோம் | |
குனோம் 3.2.0 கணினி | |
விருத்தியாளர் | குனோம் திட்டம் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்சு |
மூலநிரல் வடிவம் | திறந்த மூலநிரல் |
பிந்தைய நிலையான பதிப்பு | 3.4 / மார்ச்சு 28, 2012 |
பிந்தைய நிலையற்றப் பதிப்பு | 3.3.92rc / மார்ச்சு 25, 2012 |
கிடைக்கும் மொழிகள் | பன்மொழி (Multilingual) 50 க்கும் மேற்பட்ட மொழிகள் [1] |
தற்போதைய நிலை | தற்போதைய (Current) |
வலைத்தளம் | குநோம் |
குனோம் பணிச்சூழல், குனூ/லினக்ஸ், பீ எஸ் டீ போன்ற இயக்குதளங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
முனைய வடிவில் வழங்கிப் பயன்பாட்டிற்கு மட்டுமே அதிகமாகப் பயன்பட்டு வந்த குனு/ லினக்ஸ் இயங்குதளங்கள் மேசைத்தளங்களிலும் இன்று அதிகமாக பயன்படுத்தப் படுவதற்கு குநோம் பணிச்சூழல் திட்டத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.
உபுண்டு லினக்சு, ஃபெடோரா போன்ற குனூ/லினக்ஸ் வழங்கல்கள் குனோமினை இயல்பிருப்பாக கொண்டிருக்கின்றன.
குனோம் பணிச்சூழலுக்கு மாற்றான பல்வேறு பணிச்சூழல்கள் கட்டற்ற மென்பொருள் உலகில் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் கே டீ ஈ, எக்ஸ் எஃப் சீ ஈ, ஃபயர் ஃபாக்சு, என்லைட்மென்ட் போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.
குனோம் பணிச்சூழலானது விளையாட்டுக்கள் தொடக்கம் உரைத்திருத்திகள் வரை ஏராளமான சிறு செயலிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
சமீபத்திய வெளீயீடு : குநோம் 3.4
வெளி இணைப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ GNOME 3.2 Release Notes, பார்க்கப்பட்ட நாள் 2011-12-09
- ↑ குநோம் உச்சரிப்பு பரணிடப்பட்டது 2006-11-28 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)