குன்னத்தூர் மலை, மதுரை
குன்னத்தூர் குடைவரைக் கோயில்கள் மற்றும் நவகிரக லிங்க கோவில்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள குடைவரைக் குன்று ஆகும். இந்தக் குன்று மதுரையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை செல்லும் வழியில் வரிச்சியூர் அருகே குன்னத்தூரில் அமைந்துள்ளது. இந்த குன்றில் உதயகிரிஷ்வரர் குடைவரைக் கோயில்[1][2] மற்றும் அஸ்தகிரிஷ்வரர் குடைவரைக் கோயில்[3] உள்ளது. இக்குடைவரைக் கோயில்கள் கிபி எட்டாம் நூற்றான்டைச் சேர்ந்தது. 1908 ஆம் ஆண்டு இங்கு அகழ்வாய்வு செய்ததில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், 50=க்கும் மேறப்பட்ட கற்படுக்கைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குடைவரை கோவில்கள்
தொகுமுற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த இந்த மலையின் குகையின் கிழக்குப்புறத்தில் உதயகிரிஸ்வரர் கோவிலும், மேற்குப்புறத்தில் அஸ்தகிரிஸ்வரர் கோவிலும் உள்ளன . இந்த குடைவரை கோவில்கள் பாண்டிய மன்னர்களின் கோவில் கலைக்கு வரலாற்று சான்றுகளாக உள்ளன. 1.உதயகிரிநாதர் (சூரிய பகவான்) 2.அஸ்தகிரிநாதர் (சந்திர பகவான்) 3.ஓங்காரேஸ்வர் (செவ்வாய் பகவான்) 4.பொன் ஊர்காவலர் (புதன் பகவான்) 5.குரு உலகநாதர் (குரு பகவான்) 6.அஷ்ட லெட்சுமி நாதர் (சுக்கிரபகவான்) 7.வைரவனேஸ்வரர் (சனி) 8.9.திருநீலகண்டேஸ்வரர் (ராகு கேது)