குப்பம் ஆறு
குப்பம் நதி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் தலிபார்ம்பாவில் அமைந்துள்ள ஒரு ஆறாகும். இந்த ஆறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆறு தலிபாரம்பா நகரத்தை ஒட்டிய ஏழு சிறு குன்றுகளால் சூழப்பட்ட குப்பம் என்ற இடத்தை கடந்து பாய்கிறது.
தோற்றம்
தொகுகுப்பம் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள - கர்நாடக எல்லையில் உருவானது. இது கூவேரி நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேரண்டி, சிறியூர், பச்செனி, ஐரிங்கல், குப்பம், பட்டுவாம், பாயங்காடி, மாத்தல் ஆகியவற்றின் வழியாக பாய்ந்து இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. குப்பம் ஆறு பாயங்காடியில் பாயங்காடி ஆறு என்று அறியப்படுகிறது. இதன் மொத்த நீளம் 50 கி.மீ. ஆகும். குட்டிகோல் ஆற்றின் ஒரு கிளை நதி கவின் முனாம்புவில் குப்பம் ஆற்றில் இணைகிறது. சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தலிபரம்பாவிலிருந்து. வனப்பகுதியின் படிநில்காடு என்ற இடத்தில் தோன்றி வலப்பட்டணம் ஆற்றானது கிட்டத்தட்ட ஒரு இரயில் வரி தண்டவாளம் போன்று பக்கத்திலேயே பாய்கிறது .[1][2]
குப்பம் கிராமம்
தொகுபண்டைய காலங்களில், குப்பம் கிராமமானது முக்கிய வணிக மையமாக இருந்தது, ஆற்றில் பயணிக்க இங்கு பல படகுகள் இருந்தன.[3][4]
துணை ஆறுகள்
தொகுகுப்பம் ஆறு சிரியோடட், குட்டிகோல்புழா, முக்கதுடு, அலகுத்துத்தொடு மற்றும் பாகுதுபுழா போன்ற துணை ஆறுகளைக் கொண்டுள்ளது.[5]
ஏழு குன்றுகள்
தொகுகுப்பம் நதியில் இருந்து பார்க்கப்படும் ஏழு மலைகள் இப்பகுதியில் அழகாக காட்சியளிக்கின்றன[6]
குப்பம் நதியில் உள்ள கோயில்கள்
தொகுகுப்பம் ஆற்றின் கரையில் பட்டால் ஸ்ரீ முத்தப்பன் மடபுரா உள்ளது, மேலும் ஜும்மனஸஜிதானது ஆற்றின் மறுபக்கத்தில் குமாம் பாலம் அருகே அமைந்துள்ளது. ஆற்றின் வடபகுதி பரியாசம் பஞ்சாயத்திலும் தென் பகுதி தலிபர்பா நகராட்சிப்பகுதியிலும் உள்ளது. முந்தைய காலங்களில் குவைவரி முதல் பாயங்காடி வரை, பராசினிடவுடனும், பாலியபட்டம் வழியாக பயணிகள் படகுச் சேவை இருந்தது. குப்பம் பணப் பயிர்களுக்கு ஒரு பெரும் சந்தையாக இருந்தது, பொருட்களின் சேமிப்பிற்காக பெரிய கிடங்குகளும் இருந்தன. மிளகு, முந்திரி, அரிக்குனுட் போன்ற உள்ளூர் பண்டங்கள் தினந்தோறும் வணிகத்தில் கையாளப்பட்டன.
குப்பம் நதி மீது பாலங்கள்
தொகுஇந்த ஆற்றின் மீதுள்ள பாலம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 17 செல்கிறது. இன்னொரு பாலமானது மாநில நெடுஞ்சாலைக்கு உரியதாக பாயங்காடியில் ஆற்றின் குறுக்கே உள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.indiamapped.com/rivers-in-india/kumpam-river/
- ↑ http://kerala-rivers.blogspot.in/2013/01/kuppam-river.html
- ↑ http://www.indiamapped.com/rivers-in-india/kumpam-river/
- ↑ http://www.kerala.me/environment/lakes-and-rivers/kuppam
- ↑ http://www.indiamapped.com/rivers-in-india/kumpam-river/
- ↑ http://www.indiamapped.com/rivers-in-india/kumpam-river/