குப்பாம்பிகா
குப்பாம்பிகா (Kuppambika) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தெலுங்கு மொழிக் கவிஞர் ஆவார்.Kuppambika தெலுங்கில் இரங்கநாத இராமாயணத்தை எழுதிய மன்னரும் கவிஞருமான கோனா புத்தா ரெட்டி இவருடைய தந்தையாவார். கோனா கன்னா ரெட்டியின் தங்கையாகவும் மலியாள குண்டா தண்டதீசுடுவின் மனைவியாகவும் குப்பாம்பிகா அறியப்படுகிறார்.
கணவர் இறந்த பிறகு, குப்பாம்பிகா புத்தபுரத்தில் குண்டேசுவராலயம் என்ற சிவன் கோவிலைக் கட்டினார்.[1] 13 ஆம் நூற்றாண்டில் புத்தபுரம் கல்வெட்டுகளை வெளியிட்டார். கல்வெட்டுகள் இவரை முதல் தெலுங்குக் கவிஞர் என்று சித்தரிக்கின்றன. பிரபலமான கவிஞரான அய்யலராசூ ராமபத்ருடு என்பவர் மக்கள் முன்னிலையில் குப்பாம்பிகாவின் கவிதைகளை வாசித்தார். மன்னர் கிருட்டிண தேவராயருக்கு முன்பாகவும் இவரது கவிதைகளை வாசித்துள்ளதாக அறியப்படுகிறது.
பதின்ம வயதிற்கு மாறிய ஒரு பெண்ணின் உணர்வுகளை விவரிக்கும் குப்பாம்பிகா எழுதிய
వనజాతాంబకుడేయు సాయకములన్ వర్జింపగా రాదు, నూ తన బాల్యాధిక యౌవనంబు మదికిన్ ధైర్యంబు రానీయద త్యనురక్తిన్ మిముబోంట్లకున్ దెలుప నాహా! సిగ్గుమైకోదు పా వన వంశంబు స్వతంత్రమీయదు చెలీ! వాంఛల్ తుదల్ముట్టునే
என்ற தெலுங்கு இலக்கிய கவிதையை தனது இசைப்பாடல்களில் பயன்படுத்தியாக அய்யலராசூ ராமபத்ருடு குறிப்பிட்டுள்ளார்.[2]