குமரி அபூபக்கர்

குமரி அபூபக்கர் (பிறப்பு: ஏப்ரல் 22 1938) தமிழ் இஸ்லாமியப் பாடகர். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் தற்போது சென்னை அஸ்தினாபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகின்றார். வாலை மணி ஆசானிடம் முறைப்படி சங்கீதம் பயின்ற பாடகர். கவி கா. செரீபீன் சீறா விளக்கவுரைப் பாடலாகத் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பாடி புகழ் பெற்றார். அத்துடன் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பெருவிழாக்களில் இஸ்லாமிய இசைப் பாடல்களைத் தொடர்ந்தும் பாடி வருகின்றார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும் தொகு

புதுக்கல்லூரியில் நடைபெற்ற சீறா கருத்தரங்கில் சான்றோர் பெருமக்களால் இசையருவி பட்டம் பெற்றார்.

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_அபூபக்கர்&oldid=2796388" இலிருந்து மீள்விக்கப்பட்டது