குமாரசாமி கவுண்டன் வலசு
குமாரசாமி கவுண்டன் வலசு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது அப்பனூத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.பழனி-யில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் தாராபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள்
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தோராயமாக ~ 300 மக்கள் வசிக்கின்றனர்.இங்கு ஒரு ஆரம்பப்பள்ளி உள்ளது. அது ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தமிழ்வழி கல்வி வழங்குகிறது.[1]
கோவில்கள்
தொகு- காளியம்மன் கோவில்
- விநாயகர் கோவில்
- கருச்சி அப்பிச்சி கோவில்
- முனியப்பன் கோவில்
- காட்டு கருப்பணசாமி கோவில்
வேளாண்மை
தொகுஇவ்வூரின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. முக்கியமாக மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி ஆகியன பயிரிடப்படுகிறது. மழை மற்றும் நிலத்தடிநீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாகும்.
- பயிர்கள்:மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி
- காய்-கறிகள் : கத்தரி , வெங்காயம் , மிளகாய் , வெண்டைக்காய் , தக்காளி, சுரைக்காய் ,பீர்க்கங்காய் , பூசணி.
இவையனைத்தும் ஒடடனசத்திரம் காந்தி சந்தை மற்றும் பழனி உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவை தவிர பாசிப்பயறு,உளுந்து , கொள்ளு ,நரிப்பயிர் போன்ற தானியங்களும் பயிரிடப்படுகின்றன. விவசாயம் சார்ந்த ஆடு வளர்ப்பு, மாடுவளர்ப்பு ஆகியவையும் செய்யப்படுகிறது.
|
|
|
பேருந்துகள்
தொகு- சாலக்கடை 5
தடம் --> பழனி - தொப்பம்பட்டி - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு - சாலக்கடை
- 22
தடம் --> பழனி - தொப்பம்பட்டி - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு
- உழவர் சந்தை பேருந்து
தடம் --> பழனி - பூலாம்பட்டி - வாகரை - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு