குமுகம் (வியட்நாம்)
வியட்நாமில் மூன்றாம் அடுக்கு ஆட்சிப் பிரிவுகளில், 1,581 சிறகங்களும், 603 நகரியங்களும் 8,978 குமுகங்களும் அமைகின்றன.[1]சிறகம் (பூவோங்), குமுக மட்ட நகரியம், (தித்திரான்), ஊரக்க் குமுகமும் (வியட்நாமியம்: சா Chữ nôm:社) ஆகியவை சமத் தகுதியுள்ள மூன்றாம் அடுக்கு ஆட்சிப் பிரிவுகளாகும்.
ஊரகக் குமுகம் (Rural Commune) மாகாண நகரத்துக்கோ ஊரக நகரியத்துக்கோ அல்லது ஊரக மாவட்டத்துக்கோ (வியட்நாமியம்: குயேன்) கட்டுபாட மூன்றாம் அடுக்கு ஆட்சிப் பிரிவாகும்.
நிலவரம்
தொகுசில சிற்றூர்கள் ஆட்சி சார்ந்த குமுகங்களாக அமைவதில்லை.
வியட்நாமில் 2008 திசம்பர் 31 இன் நிலவரப்படி, 9,111 ஊரகக் குமுகங்கள் அமைந்தன. மற்ற மாகாண மட்ட ஆட்சி அலகுகளைவிட தாங்கோவா மாகாணத்தில் உயரெண்ணிக்கை ஊரகக் குமுகங்கள் (586) அமைந்தன. அதற்கடுத்து நிகேயான் மாகாணத்தில் 436 குமுகங்களும் கனாய் நகரில் 408 குமுகங்களும் அமைந்தன. தாநாங்கில் மிக்க் குறைவாக 11 ஊரகக் குமுகங்களே அமைந்தன. ஒன்றாக, கூடுதலான ஊரகக் குமுகங்கள் அமைந்த பின்வரும் பத்து மாகாணங்களில்— அதாவது, தாங்கோவா (586), நிகேயான் (436), கனாய் (408), தாய் பின் (267), பூத்தோ (251), காதின் (238), கை துவோங் (234), குவாங் நாம் (210), பாசு கியாங் (207), இலாங்சோன்(207) ஆகியவற்றில் மட்டும்— வியட்நாமில் உள் அனைத்து ஊரகக் குமுகங்களில் மூன்றில் ஒருபங்கைப் பெற்றுள்ளன. இம்மாகாணங்களில் மூன்று சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை வட்டாரத்திலும் அடுத்த மூன்று தோங்பாசுவிலும் (வடகிழக்கு வட்டாரம்) மற்ற மூன்று பாசுதிரங் போவிலும் (நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரம்) இன்னும் ஒன்று நாம்திரங் போவிலும் (நடுவண் தெற்குக் கடற்கரை வட்டாரம்) அமைந்துள்ளன.[2]
அண்மைய வியட்நாமின் பொதுப் புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, வியட்நாமில் 11164 மூன்றாம் மட்ட (குமுக மட்ட) ஆட்சிப் பிரிவுகள் உள்ளன.[3]