குமுது பிரியங்கா
குமுது பிரியங்கா திசாநாயக்க முடியன்செலகே (Kumudu Priyanka Dissanayake Mudiyanselage) இலங்கையைச் சேர்ந்த இணை ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரராவார். 1988 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தின் டி 45 மாற்றுத்திறன் வகைப்பாட்டு பிரிவில் தற்போதைய உலக சாதனை படைத்தவர் குமுது பிரியங்கா ஆவார்.[1] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடை கால இணை ஒலிம்பிக் போட்டியில் இவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். இதுவே இவருடைய முதல் இணை ஒலிம்பிக் போட்டி அறிமுகம் ஆகும்.[2][3]
தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | குமுது பிரியங்கா திசநாயகே முதியன்செலகே |
பிறப்பு | 26 மார்ச்சு 1988 |
ஆண்டுகள் செயலில் | 2006-முதல் |
விளையாட்டு | |
விளையாட்டு | இணை ஒலிம்பிக்கு |
மாற்றுத்திறன் வகைப்பாடு | டி47 |
கழகம் | இரிகாப் லங்கா விளையாட்டு மன்றம் |
சுயசரிதை
தொகு16 வயதில் கைக்குண்டு வெடித்ததால் இவர் தன் இரு கைகளையும் ஒரு கண் பார்வையையும் இழந்தார்.[4] அவர் தற்போது மாசு ஓல்டிங்சு என்ற பெண்கள் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறார்.[5]
தொழில்
தொகு2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை தடகள தேசிய சந்திப்பின் போது இணை தடகளத்தில் இவர் அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி அன்று, இவர் பெண்கள் 200 மீ மாற்றுத் திறன் வகைப்பாடு டி 45 பிரிவில் 28.58 வினாடிகளில் ஓடி பன்னாட்டு இணை ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்தார்.[6]
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இணை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாகப் பங்கேற்று நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். சக நாட்டை சார்ந்த அமரா இந்துமதி பெண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். குமுது பிரியங்கா ஆரம்பத்தில் 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார், ஆனால் அதே நிகழ்வில் உசுபெகிசுதான் விளையாட்டு வீரரின் ஊக்கமருந்து விதி மீறலைத் தொடர்ந்து இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெண்கலப் பதக்க நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[7] துபாயில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு உலக இணை தடகள கிராண்ட் பிரிக்சு மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் குமுது பிரியங்கா வெண்கலப் பதக்கம் பெற்றார்.[7][8]
டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச இணை ஒலிம்பிக் கமிட்டியின் இருதரப்பு அழைப்பை இவர் பெற்றார். 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே பெண் விளையாட்டு வீராங்கனையாகவும் இவர் திகழ்ந்தார். டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் இலங்கை போட்டியிட தகுதி பெற்ற ஒரே குடிமகளாகவும் இவர் இருந்தார். மீதமுள்ள விளையாட்டு வீரர்கள் இலங்கை இராணுவத்துடன் இணைந்திருந்தனர்.[5] அமரா இந்துமதிக்கு பிறகு இணை ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது பெண் போட்டியாளர் குமுது பிரியாங்கா என்பதும் கூடுதல் சிறப்பாகும்.[5]
2020 டோக்கியோ கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் நீளம் தாண்டுதல் மற்றும் பெண்கள் 100 மீ டி 47 ஆகிய இரண்டு போட்டிகளிலும் குமுது பிரியங்கா பங்கேற்றார்.[9][10]
பெண்கள் 100 மீ ப்ப்ட்டத்தின் டி 47 மாற்றுத் திறன் வகைப்பாட்டுப் போட்டியின் முதல் சுற்றில் குமுது பிரியங்கா முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் போட்டியிட்டார். 7 ஆவது பாதையில் ஓடிய இவர் 13.31 வினாடிகளுடன் 8 ஆவது இடத்தையேப் பிடித்தார். இதனால் குமுது பிரியங்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ www.fidalservizi.it http://www.fidalservizi.it/risultati/2021/Jesolo_2021/804-1-06SE.htm. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Peiris, Sudarshana (2021-08-31). "Kumudu Priyanka makes her Paralympic debut". ThePapare.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Athletics DISSANAYAKE MUDIYANSELAGE Kumudu P. - Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Kumudu Priyanka Dissanayake Mudiyanselage - Athletics | Paralympic Athlete Profile". International Paralympic Committee (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ 5.0 5.1 5.2 https://www.dailynews.lk/2021/08/16/sports/256733/kumudu-priyanka-sri-lanka%E2%80%99s-only-female-athlete-tokyo-para-games
- ↑ "IPC Women's 200m Records". IPC. 26 September 2017. பார்க்கப்பட்ட நாள் 31 August 2021.
- ↑ 7.0 7.1 Ratnaweera, Dhammika. "Para Athlete Kumudu Priyanka wins Bronze in Dubai". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Kumudu Priyanka wins bronze at World Para Athletics Grand Prix 2021". CeylonToday (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Athletics - Women's 100m - T47 Schedule | Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Athletics - Women's Long Jump - T47 Schedule | Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.