கும்பகோணம் சித்தி விநாயகர் கோயில்

கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் காமாட்சி ஜோசியர் தெருவிலுள்ள விநாயகர் கோயிலும் ஒன்றாகும். [1] விநாயகர் கோயில்களில் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர் என்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன. கும்பகோணத்தில் இரு சித்தி விநாயகர் கோயில்களும், இரு வரசித்தி விநாயகர் கோயில்களும் உள்ளன.

காமாட்சி ஜோசியர் தெரு சித்திவிநாயகர் கோயில்
மணிக்கூண்டு சித்திவிநாயகர் கோயில்
பாணாதுறை வரசித்தி விநாயகர் கோயில்

காமாட்சி ஜோசியர் தெரு சித்தி விநாயகர்

தொகு

கும்பகோணத்தில் காமாட்சி ஜோசியர் தெருவின் கடைசியில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் கோபுரத்துடன் கூடிய முதன்மை வாயில் மடத்துத் தெருவில் இருந்தாலும், இந்த விநாயகர் கோயில் வழியாக காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்லலாம் என்பதை அறிவிக்கும் வகையில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் பெயர்ப்பலகை விநாயகர் கோயிலின் முன்பாக காணப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.

குடமுழுக்கு

தொகு

கோயிலின் முகப்பில் விநாயகர், முருகன் சிலைகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் 23.2.2004இல் கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான கல்வெட்டுக் குறிப்பு உள்ளது.

மணிக்கூண்டு சித்தி விநாயகர்

தொகு

மகாமகக்குளத்தின் அருகே மணிக்கூண்டிற்கு அடுத்து ஒரு சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.இக்கோயிலில் அய்யப்பன், வீர ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் உள்ளன.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலில் அக்டோபர் 22, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.

மூர்த்தி சாலை வரசித்தி விநாயகர் கோயில்

தொகு

சித்தி விநாயகர் என்பது போன்று வரசித்தி விநாயகர் என்ற கோயிலும் கும்பகோணத்தில் உள்ளது. வரசித்தி விநாயகர் கோயில் என்ற பெயரில் உள்ள விநாயகர் கோயில் டாக்டர் மூர்த்தி சாலையில் அமைந்துள்ளது.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 22, 2015இல் நடைபெற்றது. [2] [3]

பாணாதுறை வரசித்தி விநாயகர் கோயில்

தொகு

பாணாதுறை வரசித்தி விநாயகர் கோயில் பாணாதுறை திருமஞ்சனவீதியில் அமைந்துள்ளது.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 26, 2015இல் நடைபெற்றது.[3] [4]

மேற்கோள்கள்

தொகு