கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்

கும்பகோணம் நகரில் இரு வெங்கடாஜலபதி கோயில்கள் உள்ளன.

குமரன் தெரு வெங்கடாஜலபதி கோயில்
காவேரிக்கரைத்தெரு வெங்கடாஜலபதி கோயில்


குமரன் தெரு

தொகு

திருக்குடந்தை திருப்பதி எனப்படும் இக்கோயிலில் வெங்கடாஜலபதி மூலவராக உள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். தனிசன்னதியில் மூலவர் பத்மாவதி தாயார் உள்ளார். புதிதாக கொடிமரம், கருடாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் 10 திவ்ய தசாவதாரப் பெருமாள்களின் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. [1]

குடமுழுக்கு

தொகு

குடமுழுக்கிற்கான பூஜைகள் 5.11.2013-இல் தொடங்கின. 6.11.2013 அன்று காவிரி நீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை விஸ்வரூபம், கும்ப மண்டல பிம்பாகனி சதுஸ்தான பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதற்குப் பின்னர் கடங்கள் அங்கிருந்து புறப்பட்டு 7.11.2013 காலை 9.30-க்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதற்கு முன்னர் 1977-இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

காவேரிக்கரைத் தெரு

தொகு

காவேரிக்கரைத் தெருவில் மற்றொரு வெங்கடாஜலபதிகோயில் உள்ளது. காவேரிக் கரையையொட்டி அமைந்துள்ள இக்கோயிலில் பெருமாள் மூலவராக உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு