கும்பாவுருட்டி அருவி
கும்பாவுருட்டி அருவி (Kumbhavurutty Waterfalls) என்பது தென்னிந்தியாவின் பிரபலமான அருவி ஆகும். இது கேரளாத்தின், கொல்லம் மாவட்டத்தில், ஆரியங்காவு பஞ்சாயத்துக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லை அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவியானது கேரளத்தில் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அருவிகளில் ஒன்றாகும். [1] சுற்றுலாவின் உச்ச காலங்களில், இந்த சுற்றுலா இடத்தின் தினசரி வசூல் ரூ. 1,50,000 ஆகும். இது அச்சன்கோவிலிலிருந்து சுமார் 6.5 கி.மீ. இல் உள்ளது. [2] இந்த அருவி அச்சன்கோவில் ஆற்றின் ஒரு பகுதியாகும். இதற்கு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான அருவி மணலாறு அருவி ஆகும். பயணிகளுக்கு நல்வாய்ப்பு இருந்தால் காட்டு விலங்குகளையும் பார்க்கலாம். ஏனெனில் அருவி அடர்த்தியான கொன்னி வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ளது. [3] இந்த அருவியின் அருகிலுள்ள மற்றொரு ஈர்ப்பு பாலருவி ஆகும். [4]
கும்பாவுருட்டி அருவி | |
---|---|
Kumbhavurutti Waterfall കുംഭാവുരുട്ടി വെള്ളച്ചാട്ടം | |
கும்பாவுருட்டி அருவி | |
அமைவிடம் | கேரளம், கொல்லம் மாவட்டம் |
ஆள்கூறு | Kerala_scale:50000 9°5′5″N 77°10′22″E / 9.08472°N 77.17278°E |
வகை | பிரிவுகளாய் கொட்டுவது |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | அச்சன்கோவில் ஆறு |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Kumbhavurutty Waterfall - Kollam
- ↑ "Kumbhavurutti Waterfall, Kollam District". Archived from the original on 26 October 2014. பார்க்கப்பட்ட நாள் 17 October 2014.
- ↑ Waterfall in Kollam
- ↑ Town Planning - Kollam