கும்மா காம்போஜி
கும்மா காம்போஜி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), சுத்த மத்திமம் (ம1), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 க3 ப த1 நி3 த1 ச் |
அவரோகணம்: | ச் நி3 த1 ப ம1 க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும்.