கும் கும் பாவ்னானி

கும் கும் பாவ்னானி (Kum-Kum Bhavnani) என்பவர் பல்கலைக்கழகப் பேராசிரியரும், திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் ஆவார். 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெண்ணிய ஆய்வுகள் மற்றும் உலகளாவிய மற்றும் பன்னாட்டுச் சமூகவியல் ஆய்வுப் பேராசிரியராக இருந்தார். இங்கு இவர் பெண்கள், கலாச்சாரம், மேம்பாடு ஆகியவற்றில் பல்துறைமை தலைவராக உள்ளார்.[1] கலிபோர்னியா பல்கலைக்கழகக் கல்விப் பேரவைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

2006ஆம் ஆண்டில், பாவ்னானி தனது ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட முதல் முழு நீள, விருது பெற்ற ஆவணப்படமான தி சேப் ஆப் வாட்டர் தயாரித்தார். இந்த ஆவணப்படம் இவர் செனகல், பிரேசில், இந்தியா, எருசலேத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.[3] இதை சூசன் சரண்டனால் விவரிக்கப்பட்டது. பாவ்னானி 2012-இல் நத்திங் லைக் சாக்லேட் மற்றும் 2014இல் லூட்டா ஆகியவற்றைத் தயாரித்தார். இவர் மிரர் கேமர் பிலிம்சின் நிறுவனரும் இயக்குநரும் ஆவார்.

பின்னணி மற்றும் கல்வி

தொகு

இந்தியாவில் பிறந்து இலண்டனில் வளர்ந்த பாவ்னானி தனது முதல் பட்டப்படிப்பை இளம் அறிவியல் உளவியலில் பிரிசுடல் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் குழந்தை மற்றும் கல்வி உளவியலில் முதுகலைப் படிப்பினை முடித்தார். இவர் தனது முனைவர் பட்டத்தினை (1983-1987) 1988ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (கிங்சு கல்லூரி) பெற்றார். இவர் 1991இல் கலிபோர்னியா சாண்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

வெளியீடுகள்

தொகு

பாவ்னானி ஆசிரியராகவும் தொகுப்பாசிரியாகவும் பல புத்தகங்கள் வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் டாக்கிங் பாலிடிக்சு (கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்[4]) பெமினிசம் அண்டு 'ரேசு' (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்) பெமினிசுடு ப்யூட்சர்சு (செட் பிரசு), ஆன் தி எட்ஜசு ஆப் டெவலப்மென்ட் (ரூட்லெட்ஜ்[5]) ஆகியவை அடங்கும். மாசசூசெட்சின் சுமித் கல்லூரியின் மெரிடியன்சு, பெமினிசம், ரேசு, டிரான்சுனேசனலிசம் இதழில் நிறுவனத் தொகுப்பாசிரியராக 2000 முதல் 2002 வரை பணியாற்றினார்.[6]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் எழுத்தாளர். இயக்குநர் தயாரிப்பாளர்
2006 தி சேப் ஆப் வாட்டர் (நீரின் வடிவம்)  Y  Y  Y
2012 நத்திங் லைக் சாக்கலேட் (சாக்லேட் போல எதுவும் இல்லை)  Y  Y  Y
2014 லூட்டா-கட்டிடக்கலை மீது ஒரு ஆர்வம்-வடிவமைப்பில் ஒரு வாழ்க்கை  Y  Y  Y
2018 வீ ஆர் கலாபகோசு (நாங்கள் கலாபகோசு)  Y  Y  Y

மேற்கோள்கள்

தொகு
  1. "Kum-Kum Bhavnani | Sociology". www.soc.ucsb.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
  2. "2019-20 Academic Senate Chair Kum-Kum Bhavnani". Academic Senate. University of California. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
  3. Bhavnani, Kum-Kum (2006-02-06), The Shape of Water, பார்க்கப்பட்ட நாள் 2018-05-17
  4. "Talking politics psychological framing views youth britain | Social psychology". Cambridge University Press (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  5. "On the Edges of Development: Cultural Interventions (Hardback) - Routledge". Routledge.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  6. "Meridians – feminism, race, transnationalism". www.smith.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்_கும்_பாவ்னானி&oldid=4041688" இலிருந்து மீள்விக்கப்பட்டது