பல்துறைமை (Interdisciplinarity) என்று இரு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் துறைகள் இணைந்து ஒரே செயற்பாட்டில் (காட்டாக, ஆய்வுத் திட்டம்) ஈடுபடுவதை கூறுகிறோம். இதனால் துறை எல்லைகளைக் கடந்து அவற்றினிடையே சிந்தித்து புதுமையானதொன்றை உருவாக்க முடிகிறது. இதனால் ஒரு துறையிடைத் துறை அல்லது துறையிடை களம், என்ற அமைப்பு உருவாகிறது. புதிய தேவைகளும் தொழில்களும் உருவாகின்றவேளையில் இத்துறைகளின் உருவாக்கலும் நிகழ்கின்றன.

துவக்கத்தில், இச்சொல் கல்வித்துறையிலும் ஆசிரியப் பயிற்சிகளிலும் பயன்படுத்தப்பட்டது. பல கல்வித்துறைகளையும் தொழில்களையும் தொழினுட்பங்களையும் ஒருங்கிணைக்கும் பல்துறைமையின் நோக்கத்தில் தத்தம் குறிப்பிட்ட நோக்குடன் பொதுவான செயல்பாட்டை நாடி ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர். எய்ட்சிற்கான நோய்ப் பரவல் இயல் அல்லது புவி சூடாதல் போன்றவற்றின் புறக்கணிக்கப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வுகாண பல்வேறு துறைகளின் புரிதல் தேவையாயுள்ளது. ஒரு வழமையான கல்வித்துறையில் அல்லது ஆய்வுத்துறையில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சரியாக அறியப்படாத பாடங்களிலும், காட்டாக பெண்ணியல் அல்லது இனங்களைக் குறித்த ஆய்வுகள், துறையிடை கல்வி தேவையாகிறது.

இரண்டு அல்லது மேற்பட்ட துறைகள் தங்கள் வளங்களை கூட்டி எடுத்துக்கொண்டுள்ள சிக்கலுக்கு தீர்வு தேடுகையில் துறையிடை என்ற பெயரடை கல்வித்துறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் கூட்டாக இணைந்த வழமையான பாடத்திட்டங்களில் பாடங்களைக் கற்கின்றனர். எடுத்துக்காட்டாக, நிலப் பயன்பாடு என்ற பாடம் உயிரியல், வேதியியல், பொருளியல், புவியியல், மற்றும் அரசியல் போன்ற பலதுறைகளிலும் வெவ்வேறாக நடத்தப்படலாம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்துறைமை&oldid=3360163" இலிருந்து மீள்விக்கப்பட்டது