குரல்வளை (larynx) என்பது, பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது.

குரல்வளை
Conducting passages
குதிரையின் குரல்வளையூடான வெட்டுப் பார்வை

1 நாவடி எலும்பு
2 குரல்வளை மூடி
3 vestibular fold
4 vocal fold
5 Ventricularis muscle
6 குரல்வளை அறை
7 Vocalis muscle
8 Adam's apple
9 rings of குருத்தெலும்பு
10 infraglottic cavity
11 first bronchial tube cartilage
12 bronchial tube
கிரேயின்

subject #236 1072

தமனி superior laryngeal, inferior laryngeal
நரம்பு superior laryngeal (வெளி மற்றும் உள்), recurrent laryngeal
ம.பா.தலைப்பு குரல்வளை

செயற்பாடு தொகு

ஒலி குரல்வளையில் உருவாக்கப்படுகிறது. இங்கேதான் குரல் எடுப்பும், உரப்பும் உருவாகின்றன. நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றின் வலுவும் உரப்பின் அளவைத் தீர்மானிப்பதுடன், இது குரல் மடிப்புக்கள் பேச்சை உருவாக்குவதற்குத் தேவையானது. குரல்வளையின் செயற்பாடு, ஒரு குறிப்பிட்ட குரல் எடுப்போடு அல்லது மீடிறனோடு கூடிய ஒலியை உருவாக்குகின்றது. இந்த ஒலி குரல் தொகுதியூடாக வரும்போது மாற்றமுறுகின்றது. இவ்வொலி, நாக்கு, உதடு, வாய், தொண்டைக் குழி ஆகியவற்றின் நிலைகளுக்கு ஏற்பப் பல்வேறு விதமாக மாறுகின்றது. இவ்வாறாக ஒலி மாற்றமடைவதன் மூலமே உலகின் மொழிகளிலுள்ள உயிர் மற்றும் மெய்யொலிகள் உருவாகின்றன.


குரல்வளை ( Larynx ) குரல் உண்டாகும் உறுப்பு . கழுத்தின் முன் பக்கத்து நடுக்கோட்டில் அழுத்தமான சிறு புடைப்பாக இருக்கும் தொண்டையிலிருந்து நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுபோகும் காற்றுக் குழலின் முதற்பாகம் , இதன் உள்ளிருக்கும் இரண்டு மீள்சக்தியுள்ள நாண்கள் , நுரையீரலிருந்து வெளிச்செல்லும் காற்றினால் அதிர்வதனாலே குரலொலி உண்டாகும் . சிலவகை இசைக் கருவியிலே துருத்தியிலிருந்து வரும் காற்றின் ஓட்டத்தினாலே நாக்கு என்று சொல்லப்படும் மீள்சக்தியுடைய மெல்லிய தகடு அதிர்தலால் ஒலி எழும் . அந்தக் கருவியைப் பெரிதும் ஒத்தது குரல்வளை . இசைக்கருவியிலே நாக்கின் அலைவு நேரமும் அதன் காரணமாக அதிலிருந்து எழும் சுரமும் நாக் குடன் பொருந்தியிருக்கும் காற்றுக்குழாயையும் நாக்கின் நீளத்தையும் பொறுத்திருக்கும் . குரல் வளையிலே உண்டாகும் சுரமானது குரல் நாண்களின் இழுவிசை யின் மாறுபாட்டையும் காற்றுப் புகும் வழியாகிய குரல் வளைவாயின் அளவு மாறுவதையும் , நாண்களில் மோதும் காற்றின் வலிமை மாறுவதையும் பொறுத்திருக் கிறது . குரல்வளையானது குருத்தெலும்புகளாலான ஒரு பெட்டி . நம்முடைய மோவாயின் நடுக்கோட்டில் விரலை ஊன்றி அழுத்திக்கொண்டு கீழ்நோக்கி இழுத்துக் கொண்டு வந்தால் முதலில் உ தியான சிறு வளைவு ஒன்று விரலில் படும் . அது ஹையாய்டு என்னும் நாவடி எலும்பு . அதற்குக்கீழே சிறிது இடம்விட்டு நடுக்கோட் டில் ஒரு பள்ளமும் பள்ளத்திற்குக் கீழே அழுத்தமான புடைப்பும் இருக்கும் . புடைப்பின் இருபுறமும் சிறகு கள் போன்ற தட்டையான பாகங்கள் உள்நோக்கிச் செல்லும் . இரண்டு சிறகுகளும் கூடும் நடுக்கோட்டி லுள்ள வரம்பைத் தடவிக்கொண்டே போனால் மற் றொரு சிறு பள்ளமும் அதற்குக் கீழே அழுத்தமான வளையமும் தெரியும் . அந்த வளையமும் அதுவரையிலு முள்ளது குரல்வளை . அதற்குக் கீழே காற்றுக்குழலின் குருத்தெலும்பு வளையங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாகச் சில தெரியும் . முதலில் சொன்ன பெரிய குருத்தெலும்பு 3 . தைராய்டு குருத்தெலும்பு எனப்படும் . அதில் எடுப்பாக இருக்கும் பாகம் குரல்வளை மணி முதிர்ச்சி முற்றிய ஆண்களில் பெரிதாகக் காணும் . சிறுவர்களிலும் பெண் களிலும் புடைப்பாகத் தெரியாது . தைராய்டுக்குக் கீழே இருப்பது கிரிக்காய்டு குருத்தெலும்பு இந்தக்குருத் தெலும்பு வடிவில் ஒரு முத்திரை மோதிரம் போல இருக் கும் , முத்திரைப்பகுதி பின்புறமாகவும் , மோதிர வளைப் பகுதி முன்புறமாகவும் இருக்கும் , அந்த முத்திரைப் பகுதி குரல்வளையின் பின் சுவராக இருக்கிறது . கிரிக்காய் டின் முத்திரைப்பகுதியின் உச்சியிலே அரிட்டெனாய்டு குருத்தெலும்புகள் என்பவை இரண்டு உண்டு . குரல் நாண்கள் இரண்டு . அவை முத்துப்போன்ற வெண்ணிறமான பளபளப்பான மெல்லிய மீள்சக்தித் திசுவாலான பட்டி . அது கிரிக்காய்டின் முன்பக்க மேல் ஓரத்திற்கும் , தைராய்டு குருத்தெலும்பின் முன் பாகத்தின் உட்புறத்திற்கும் பொருந்தியிருக்கும் , இந்த நாண்களுக்கு இடையிலுள்ள கீற்றுப்போன்ற வழி குரல்வளைவாய் . குரல்வளைக் குருத்தெலும்புகளுக்குப் பொருந்தியுள்ள தசைகளின் இயக்கத்தினாலே நாண்கள் வாய் குறுகும்படி நெருங்கி வரும் , வாய் பெரிதாகும்படி அகலும் . நீளும் குறுகும் இழுவிசை மிகும் குறையும் . இந்த நாண்களுக்குமேலே போலி நாண்கள் இரண்டு உண்டு . குரல் உண்டாவதைப்பற்றிய மற்ற விவரங் களைக் குரல் ( த . க . ) என்னும் கட்டுரையில் காண்க . குரல்வளை ஒலி செய்யும் உறுப்பு என்கிறோம் , எனி னும் எத்தனையோ உயிரினங்களில் குரல்வளை இருப் பினும் அவை இதைக்கொண்டு ஒலி செய்வதில்லை . ஆத லால் இதற்கு வேறு முக்கியமான தொழில் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது . இந்த உறுப்பு மீன்கள் தவிர மற்றெல்லா முதுகெலும்பிகளிலும் உண்டு . மீன்களிலும் காற்றுப்பையும் நுரையீரலும் உள்ள இனங்களில் இது உண்டு . அங்கு அது மிகவும் எளிய தொடக்கநிலையில் இருக்கிறது . மீனின் காற்றுப்பைக்குத் தொண்டையிலிருந்து செல் லும் குழாயின் தொடக்கத்திலுள்ள தொளையே குரல் வளைவாய் ( Glottis ) . அந்த வாயைச் சுற்றிலும் காற் றுக்குழாயின் தொடக்கத்தில் நுண்ணிய சுருக்குத் தசை யொன்று இருக்கிறது . இதுவே குரல்வளையின் ஆரம்பம் . இந்தத் தசை சுருங்குவதால் குரல்வளை வாய் மூடிக்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரல்வளை&oldid=2886527" இருந்து மீள்விக்கப்பட்டது