குரல் பயனர் இடைமுகம்
ஒரு குரல் பயனர் இடைமுகம் (கு.ப.இ) மனித கணணி இடைத்தொடர்பை சாத்தியமாகுவதுடன் தானியங்கி செயல்முறைக்கு இது ஒரு ஆரம்பமாகவும் அமையும்.
ஒரு கு.ப.இ எந்த குரல் அல்லது பேச்சு மென்பொருளுக்கும் இடைமுகமாகும்.இலகுவான பேச்சு மூலம் ஒரு இயந்திரத்தை கட்டுபடுத்துவது வெறும் புனைகதையாக மட்டுமே சில காலம் முன்பு வரை இருந்து வந்துள்ளதுடன் இது செயற்கை நுண்ணறிவு சமந்தபட்டதாகவே இருந்து வந்துள்ளது . இத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் கு.ப.இ மேலும் சாதாரணமாகிவிட்டதுடன் மக்கள் கைகள் மற்றும் கண்களின் உதவி இல்லாமல் பயன்படுத்தும் இடமுகங்களை பயன்படுத்தகூடியதாகவுள்ளது.[1][2][3]
எது எவ்வாறு இருப்பினும் கு.ப.இ பல சவால்களை முகம்கொடுக்காமல் இல்லை. சொல்லுவதை இயந்திரம் விளங்கிகொள்ளவில்லை என்னும் நிலையில் இதனை பயன்படுத்துபவர்கள் சிறிதளவு பொறுமையுடனேயே காணப்படுகின்றனர். இதனால் இத் தொழில்நுட்பத்தில் வழு ஏற்படுவதற்கு இடம் கொடுக்க முடியாமல் உள்ளது. கு.ப.இ தரப்படும் உள்ளீடுக்கு ஏற்ப உண்மையாக பதிலளிக்காவிடின் நிராகரிக்கப்படும் இல்லாவிடின் பலதடவைகள் பரிகசிக்கபட்டும் உள்ளது . ஒரு நல்ல கு.ப.இ வடிவமைத்தல் கணினி அறிவியல், மொழியியல் மற்றும் மனித காரணிகள் உளவியல் போன்ற பலதுறை திறமைகளை தேவைப்படுகிறது. எல்லா திறமைகளும் பெற்றுகொள்ளவதற்கு பணசெலவு கூடிய கடினமான திறமைகளாக உள்ளன.பிந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் போதும் கூட பயனுள்ள கு.ப.இ ஒன்றை நிறுவதற்கு செய்யவேண்டிய பணிகள் மற்றும் இறுதிவடிவத்தை பயன்படுத்தவுள்ள பயனர்களின் தேவைகள் குறித்த மிக ஆழமான புரிதல் தேவைப்படுகின்றது. நெருக்கமான கு.ப.இ பணி பயனரின் மன மாதிரியுடன் பொருந்தும் நிலையில் இவ் வேலை இலகுவாக்கபடுவதுடன் சிறிய அளவு பயிற்சி அல்லது பயிற்சி தேவையற்ற நிலை உருவாகுவதுடன் உயர் வினைத்திறனுடனும் உயர் பயனர் திருப்திகரத் தன்மையையும் உருவாக்கும்.
பயனர்களின் பண்புகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. உதாரணமாக கு.ப.இ பொது மக்களிக்கா உருவாக்கப்படும் போது இலகு பாவனை மற்றும் முதல் முறை பாவனையாளர்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டல் வழங்கப்படவேண்டும் . அதேவேளை இது குறிப்பிட்ட பாவனையாளர்களுக்காக உருவாக்கப்படும் போது அவர்கள் உதவி மற்றும் வழிகாட்டலை விட மென்பொருளின் உற்பத்தி திறனையே கருத்தில் கொள்ளுவார்கள் .அப்பிடியான சில மென்பொருள்கள் அழைப்பு ஓட்டம், குறைந்த உள்ளீடு ,தேவையற்ற இடைநிலைகளை தவிர்த்தல் மற்றும் “ஆரம்பநிலை உரையாடல்களை இணைத்தலை விரிவுபடுத்துவதை அனுமதிப்பது போன்றவற்றால் பயனர்கள் பல வார்த்தைகளை உபயோகிப்பதிலும் பார்க்க ஒரு வார்த்தையை எந்த ஒழுங்கிலும் சேர்க்கையிலும் உபயோகிக்க முடிகிறது. சுருக்கமாக இவ்வகை மென்பொருள்கள் தானியங்கி செயல்முறைக்குப்பட்ட குறிப்பிட்ட வணிக செயல்முறைக்கு மிக கவனமாக வடிவமைக்கப்படுள்ளது.
அனைத்து வர்த்தக செயன்முறைகளும் குரல் தானியங்கி செயன்முறைக்கு தம்மை மாற்றிகொள்ளவில்லை. பொதுவாக மிக சிக்கலான விசாரணைகள் மற்றும் பறிமாற்றங்கள் சவாலனைவையாக இருப்பதுடன் தானியங்கி செயன்முறைக்கு உட்படுத்த வேண்டியுள்ளன அத்துடன் பொதுமக்களினிடையே பெரும்பாலும் தோல்வி அடையவே செய்கிறது.சில நேரங்களில் தானியங்கி செயன்முறை நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கும்போது நேரடி முகவர் ஒருவரின் உதவியே ஒரே தெரிவாக உள்ளது. உதாரணமாக சட்டப்பூர்வமான அவசர உதவி இணைப்பு தானியங்கி செயன்முறையாக மாற்றுது மிக கடினம்.இவ்வாறு பல கு.ப.இ மூலம் தானியங்கி செயன்முறை ஆக்குவது மிக கடினம்.
எதிர்கால பாவனைகள்
தொகுசிறிய அளவிலான சாதனங்கள் சிறிய பொத்தான்களின் மூலமே உள்ளீடுகள் பெறப்படுகின்றன. இவை சாதனத்தினுள் அல்லது தொடு திரையினுள் உருவாக்கப்படுகின்றன. இதனால் மிகையான பொத்தான் பாவனை கடினமானதும் துல்லியமானவையாகவும் இருபதில்லை. ஆகவே இலகு பாவனை மற்றும் துல்லியம்,உண்மைத்தன்மையுடன் கூடிய கு.ப.இ மிகவும் பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆயினும்கூட, கு.ப.இ, மடிகணினி மேசைக்கணினி போன்றவற்றிக்கும் நன்மை பயக்குவதுடன் தற்போது எண்மிய பிரசினங்களை தீர்ப்பதுடன் விசைப்பலகை மற்றும் சுட்டியுடன் இணைந்து செயற்படுவதுடன் பகுதியாக மணிக்கட்டு குகை நோய் மற்றும் மெதுவான தட்டச்சு அனுபவமற்ற விசைப்பலகை பயனர்களுக்கு உதவுகின்றது. திரைக்கு முன்னால் நின்ற நிலையில் அல்லது இருந்த நிலையில் விசைப்பலகையை பயன்படுத்த முடியும் எனினும் கு.ப.இ தொலைபேசியில் கூட பயன்படுத்தற்லாம் அத்துடன் விசைப்பலகையை கண்ணால் பார்க்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை.
இவ்வாறான மேம்படுத்தல்கள் தற்போதைய இயந்திரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் பயனர்கள் எவ்வாறு இடைத்தொடர்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதில் பாரிய தாக்கத்தை கொண்டுள்ளது. கையடக்க சாதனங்கள் விசைப்பலகை இல்லாத பெரிய இலகுவாக பார்க்க கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளன. தொடு திரை சாதனங்கள் தற்போது விபரம் மற்றும் திரை விசைப்பலகைக்கு இடையில் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை . மடிகணினிகள் இதனால் அளவு ரீதியில் அறைபன்காக ஆக்கப்பட்டுள்ளதுடன் ஒருங்கிணைக்கபட்ட கூறுகள் திரையின் பின்னால் அமைக்கபட்டுள்ளன. விசைபலகையின் தேவை இல்லாததால் மேசைக்க கணனிகள் கூட இடம் மீதம் ஆக்கப்படுகிறது. இவ்வாறு தொலைக்காட்சிப்பெட்டியின் தொலை கட்டுப்பாட்டு கருவிகள் விசைப்பலகை நுண்ணலை அடுப்பு பிரதிஎடுப்பான்கள் போன்றவை கூட இதனால் பயன் பெறுகின்றன.
பல்வேறு சவால்களை தாண்டி வந்த போதும் இவ்வார மேம்படுத்தல்கள் நடைபெற்றுள்ளன. முதலில், கு.ப.இ ஆனது நவீனதுவமாகபட்டுள்ளதுடன் உள்ளீடுகளிட்ட்கு இடையிலான வேறுபாடை உதாரணமாக மற்றும் கட்டளை பின்புல உரையாடல்களிற்கு இடையில் கொண்டுள்ளது. இல்லாவிடின் பிழையான உள்ளீடு கொடுக்கபடுவதுடன் இணைக்கபட்டுள்ள சாதனம் பிழைகளை கொண்டதாக அமையும். பிரபல தொலைகாட்சி புனைகதை நாடகம் மற்றும் படங்களில் உதாரணமாக Star Treck, கு.ப.இ ஐ ஒரே பாவனையாளரின் வேறு பல உள்ளீடுகளை பெறக்கூடிய வைகையில் அமைக்க பட்டுள்ளதாக கட்டப்படுகின்றது. கு.ப.இ மனிதனைப்போன்று பிரதிநிதித்துவப்படுத்த கூடிய துலங்கலை துல்லியமாக காட்டகூடியவாறு கொள்கைறீதியில் கூறப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியமைவு தொடர்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Washing Machine Voice Control". Appliance Magazine.
- ↑ Borzo, Jeanette (8 February 2007). "Now You're Talking". CNN Money. https://money.cnn.com/magazines/business2/business2_archive/2007/02/01/8398978/index.htm.
- ↑ "Voice Control, the End of the TV Remote?". Bloomberg.com (Business Week). 9 December 2011 இம் மூலத்தில் இருந்து December 8, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111208224714/http://www.businessweek.com/magazine/voice-control-the-end-of-the-tv-remote-12082011.html.