குரவம்
குரவம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Tarenna asiatica
|
இருசொற் பெயரீடு | |
Tarenna asiatica (L.) Kuntze ex K.Schum. | |
வேறு பெயர்கள் | |
Webera glomeriflora Kurz |
குரவ மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
- குரவ மலரின் நனை-அரும்புகள் மரக்கிளைகளில் பசுமை நிறத்தில் காணப்படும்.[1]
- குரவம் என்னும் மலர் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.[2]
- நறுமணம் மிக்க குரவம் பூவைப் 'பாவை' என்பர்.[3]
- குரவம் காட்டில் பூக்கும் மலர்.[4]
- குரவமரம் நீண்ட நீண்ட சினைகளை (வலார் போன்ற கிளைகளை) உடையது. இதன் பூக்களைக் குயில்கள் விரும்பி உண்டு அதில் வாழும்.[5]
- குரவம்பூ மிகுதியான மகரந்தப் பொடிகளை உடையது.[6]
இவற்றையும் பார்க்கவும்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
பல்வீ படரிய பசுநனைக் குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணி கொளாச்
சினை இனிதாகிய காலை - குறுந்தொகை 341 - ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 82
- ↑ நறும்பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை - ஐங்குறுநூறு 344
- ↑
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன் அணி கொண்ட கானம் - ஐங்குறுநூறு 357 - ↑ குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு 369
- ↑
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317-10