குரவைக் கூத்து
குரவைக்கூத்து என்பது கூத்தின் ஒரு வகையாகும். இவ்வகைக் கூத்து பழங்காலத் தமிழ்ச் சமூகம் தொட்டு இன்றுவரை வழக்கிலுள்ளது.[1] போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போக்குக்காகவும் குறவர்கள் குரவைக் கூத்து ஆடப்பட்டு வந்ததுள்ளனர். குரவைக் கூத்தினை 'மலை நடனம்' 'மலைக்குறவர் நடனம்' என்று அபிதான சிந்தாமணி குறிக்கின்றது. தொடக்கக் காலத்தில் மக்களின் பொழுது போக்காகக் கூத்து விளங்கியது. காலப்போக்கில் கருத்துகளின் அடிப்படையில் ஆடப்பெறும் கூத்தாக உருப்பெற்றது எனலாம். குரவைக் கூத்திற்குத் தெற்றியாடல் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது.[2]
போர்க்காலக் குரவை
தொகுபோர்க்காலத்தில் ஆடப்படும் குரவைக் கூத்தில் கோபமும், வீரமும் மிக்குத் தோன்றும். இதனைச் 'சினமாந்த வெறிக்குரவை' எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.[3]
தண்குரவை
தொகுபோரில்லாத காலங்களில் அமைதியான முறையில் குரவைக் கூத்து நடைபெறும். இது தண்குரவை என அழைக்கப்பட்டது.
இதனை
'திண்திமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு
தண்குரவைச் சீர்தூக்குந்து'[4]
என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.
தீவினை அச்சத்தின் போது
தொகுதீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையில் தீங்கு நிகழாமல் காக்கும் 'காப்பு'-ஆக குரவையைக் கருதினர். குடத்துப் பால் உறையாமை, இமிலேறு கண்ணீர் சொரிதல், வெண்ணெய் உருகாமை, மறி மடங்கி ஆடாமை முதலான தீ நிமித்தங்களால் ஏதேனும் தீங்கு நேருமோ என ஆயர்கள் அஞ்சினர். எனவே அனைவரும் ஒன்று கூடி குரவைக் கூத்தாடினர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
குரவைக் கூத்தின் முறைகள்
தொகு- தலைக்கைத் தருதல்
தழூஉ
தொகுகுரவைக் கூத்தாடும் போது ஒருவரை ஒருவர் தழுவியாடும் வழக்கம் உண்டு. கூத்தில் ஆடும் ஆடவரும் பெண்டிரும் இரண்டிரண்டு பேராகத் தழுவி ஆடுவர். இவ்வகைக் குரவையினை இலக்கியங்கள் தழூஉ என வகைப்படுத்துகின்றன.இருவராகத் தழுவி ஆடும் போது ஆடியபடியே தழுவும் தமது இணையை மாற்றுவர். ஒரே இணையோடு இறுதிவரை ஆடுவதில்லை ஆட்டத்தின் போக்கில் பிணைகள் மாறிக்கொண்டேயிருக்கும். இதனைப் 'பல் பிணைத் தழீஇ' எனத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது. [5]