குராவ்லி (Kuraoli) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் மைன்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும்.

குராவ்லி
Kuraoli
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மைன்புரி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்20,680
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 ( இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 20,680 பேர் ஆவர். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். குராவ்லி நகரின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 65% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 47% ஆகும். மக்கள் தொகையில் 17 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

கல்வி

தொகு

குராவ்லி நகரில், தேவ் நாக்ரி இடைக் கல்லூரி, சிறீ மாலிக்கான் இடைக் கல்லூரி, லல்லுசிங் இடைக் கல்லூரி, சிறீ மாலிக்கான் பட்டக் கல்லூரி, சிறீ கமலா சிம்ரதி பட்டக்கல்லூரி, அபந்திபாய் இடைக் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் கல்வி புகட்டி வருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குராவ்லி&oldid=3575140" இலிருந்து மீள்விக்கப்பட்டது