குருகிலை
குருகிலை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | F. virens
|
இருசொற் பெயரீடு | |
Ficus virens L. |
குருகிலை (Ficus virens) என்பது அத்தி இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது. [1]
குருகிலையின் தன்மைகள்
தொகுமழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும். [2] [3]
குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும். [4]
வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள். [5]
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை [6]
குருகு (மலை)
தொகுகுருகு பெயரிய குன்றம் என்பது கிரவுஞ்ச மலை. முருகன் குருகுமலையை வேலெறிந்து பிளந்தார் என்பது புராணக்கதை.
மேற்கோள்கள்
தொகு- ↑ குருகிலை * குருகிலை
- ↑ பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை (நான்மணிக் கடிகை)
- ↑ அருளி அதிரக் குருகிலை பூப்ப (திணைமொழி ஐம்பது பாடல் 30)
- ↑
அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். (திணைமொழி ஐம்பது பாடல் 21) - ↑
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. (கார்நாற்பது பாடல் 27) - ↑ குறிஞ்சிப்பாட்டு - பாடல் அடி 73