குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்

குருணாகல் கடிகார கோபுரம் (Kurunegala Clock Tower) என்பது இலங்கையின் குருணாகல் நகரத்தில் அமைந்துள்ளது. இது முதல் உலகப் போரில் பங்கேற்று இறந்த வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [2] குருணாகல் நீதிமன்றம், மத்திய சந்தை, மத்திய பேருந்து நிலையம் ஆகியவை இக்கடிகார கோபுரத்திற்கு அருகில் உள்ளன.

குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம்
குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம்
ஆள்கூறுகள்7°29′12.8″N 80°21′54.3″E / 7.486889°N 80.365083°E / 7.486889; 80.365083
இடம்குருணாகல், இலங்கை
கட்டுமானப் பொருள்கருங்கல், சீமைக்காரை, மரம்
முடிவுற்ற நாள்1922
அர்ப்பணிப்புஇது முதல் உலகப் போரில் பங்கேற்று இறந்த வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1]

வரலாறு

தொகு

முதல் உலகப் போரில் (1914-1918) வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் மூன்று இலங்கையர்களும் அடங்குவர். அவர்களை கௌரவிப்பதற்காக இக்கோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் மீது ஒரு நினைவுத் தகடு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:

“இந்த மணிக்கூட்டுக் கோபுரம் வடமேற்கு மாகாணத்திலிருந்து கடமை என்ற அழைப்பின் பேரில் சென்று 1914-1918 உலகப் போரில் பேரரசிற்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.”

1945-க்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரில் (1939-1945) தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் மிக்க அதிகாரிகளுக்கும் இந்தக் கோபுரம் அர்ப்பணிக்கப்பட்டது. [3]

அம்சங்கள்

தொகு

கருங்கல், சீமைக்காரை, மரம் ஆகியவற்றைக் கொண்டு நாற்கர வடிவத்தில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முழு கோபுரமும், குறிப்பாக மேலே, ஒரு நாற்புற கோட்டைக்கு ஒத்ததாக தோன்றுகிறது. உள்ளே கான்கிரீட்டாலும், மரத்தாலும் செய்யப்பட்ட படிகள் உள்ளன. [4]

உசாத்துணை

தொகு
  1. Dhananjani Silva (28 September 2014). "Kurunegala, a regal city". The Sunday Times. Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  2. "Unveiling the beauty of Athugalpura". Ceylon Today. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Sri Lanka war monuments". Silumina (in Sinhala). Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "මහායානයයි - හීනයානයයි එකට පැටලුණු වංග දේශය". Mawbima (in Sinhala). Archived from the original on 27 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)