குருதாசு சிங் பாதல்

குருதாசு சிங் பாதல் (Gurdas Singh Badal)(6 ஆகத்து 1931 - 15 மே 2020) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அபுல்கரானாவில் பிறந்தார். இவர் பிரகாஷ் சிங் பாதலின் சகோதரர் ஆவார். இவர் 1967ல் சிரோமணி அகாலிதளத்தின் உறுப்பினராக பாசில்கா தொகுதியிலிருந்து ஏழாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 15 மே 2020 அன்று மொகாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார்.[3][4]

குடும்பம் தொகு

குருதாசு சிங் பாதல், மறைந்த ரகு ராஜ் சிங் தில்லானின் மகனும், பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் தம்பியும் ஆவார். இவரது மகன் மன்பிரீத் சிங் பாதல் பஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்தார். இவரது மனைவி கவுர் மார்ச் 2020ல் இறந்தார்.[5]

அரசியல் வாழ்க்கை தொகு

பாதல் மார்ச் 1967 முதல் ஏப்ரல் 1969[6] வரை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 15 மார்ச் 1971 முதல் 18 ஜனவரி 1977 வரை அகாலி தளம் (தற்போது சிரோமணி அகாலி தளம் என அழைக்கப்படுகிறது) கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக பாசில்கா தொகுதியிலிருந்து இந்தியாவின் 5வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Last Loksabha Election Results in Fazilka, Punjab
  2. Members Bioprofile
  3. "Punjab finance minister Manpreet Badal's father passes away". The Times of India. 15 May 2020. https://timesofindia.indiatimes.com/city/amritsar/punjab-finance-minister-manpreet-badals-father-passes-away/articleshow/75751309.cms. பார்த்த நாள்: 15 May 2020. 
  4. "Gurdas Badal, father of Punjab Finance Minister Manpreet Badal, dies at 88". The Tribune. 15 May 2020. https://www.tribuneindia.com/news/punjab/gurdas-badal-father-of-punjab-finance-minister-manpreet-badal-dies-at-88-85111. பார்த்த நாள்: 15 May 2020. 
  5. "Punjab FM Manpreet Badal's mother passes away". The Times of India. 19 March 2020. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/punjab-fm-manpreet-badal-bereaved-mother-passes-away/articleshow/74703846.cms. பார்த்த நாள்: 13 May 2020. 
  6. "Fifth Lok Sabha, Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதாசு_சிங்_பாதல்&oldid=3453985" இலிருந்து மீள்விக்கப்பட்டது