குருதிக் குழாய் வரைவி

குருதிக் குழாய் வரைவி (angiography) என்பது இதயத்தின் மேலுள்ள குருதிக் குழாய்களில் அடைப்பு ஏதேனும் உள்ளதா எனக்கண்டறியும் ஒரு பரிசோதனையாகும்.பொதுவாக மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அல்லது நெஞ்சு வலியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.[1][2][3]

ஆஞ்சியோகிராம் தொடை அல்லது மணிக்கட்டின் அருகேயுள்ள தமனியின் வாயிலாக செய்யப்படுகிறது. 1.5 மிமீ முதல் 2.௦.மிமீ விட்டமுடைய நுண்ணிய குழாய்கள் மகாதமனியின் உள்ளே செலுத்தப்படுகின்றன. பின்னர் இக்குழாய்களின் வழியாக ரேடியோ கான்ட்ராஸ்ட் மருந்து செலுத்தப்படுகின்றது. அச்சமயம் எக்சு கதிர் கொண்டு இதயம் படம் பிடிக்கப்படும். இதன் மூலம் இதய இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏதேனும் இருப்பின் அவை துல்லியமாக அறியப்படுகின்றன.

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Angiography
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிக்_குழாய்_வரைவி&oldid=3890199" இலிருந்து மீள்விக்கப்பட்டது