குருதி ஊட்டக்குறை

குருதி ஊட்டக்குறை (Ischemia அல்லது ischaemia, இசுகிமியா) இழையங்களுக்கு குருதி கொண்டு செல்லப்படுவது தடைபடுவதால் இழையங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆக்சிசன், குளுக்கோசு குறைபாடு ஏற்படுவதைக் குறிக்கிறது.[3] குருதி ஊட்டக்குறை பொதுவாக குருதிக்குழல்களில் ஏற்படும் கோளாறுகளால் உருவாகின்றது; இதனால் தொடர்புடைய இழையங்கள் சேதமடையவும் செயற்திறனை இழக்கவும் காரணமாகிறது. தாழாக்சியம், நுண் குருதிக்குழல் செயற்பிழற்சி போன்றவை ஏற்படுகின்றன.[4][5] நீர்மக்குழல் மேல்மறைப்பு (சுருக்கம்), நாளச் சுருக்கம், குழலியக்குருதியுறைமை, குருதிக் குழாய்க்கட்டி அடைப்பு போன்றவையால் உடலின் ஒரு அங்கத்தில் மட்டும் சிலநேரங்களில் உள்ளக தாழாக்சியம் ஏற்படலாம். குருதி ஊட்டக்குறைபாட்டில் ஆக்சிசன் குறைவைத் தவிர பிற ஊட்டக்கூறுகளும் குறைவாக இருக்கும்; வளர்சிதை மாற்றக் கழிவுகளும் வெளியேற்றப் படாதிருக்கும். குருதி ஊட்டக்குறை பகுதியாகவோ (மோசமான உட்செலுத்துகை) முழுமையாகவோ இருக்கலாம்.

குருதி ஊட்டக்குறை
ஒத்தசொற்கள்இஸ்கிமியா
கால்விரல்களில் ஊட்டக்குறையுள்ள இரத்தநாளம் காரணமாக நீலம் பூரித்திருத்தல்
பலுக்கல்
சிறப்புநாளஞ்சார் அறுவை சிகிச்சை

மேற்கோள்கள்

தொகு
  1. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி 2வது பதிப்பு, 1989.
  2. மெர்ரியம்-வெப்சுடர் இணைய அகராதியில் உள்ளடக்கம் "இசுகிமியா" .
  3. Merck & Co. Occlusive Peripheral Arterial Disease, The Merck Manual Home Health Handbook website, revised and updated March 2010. Retrieved March 4, 2012.
  4. Zhai Y, Petrowsky H, Hong JC, et al: Ischaemia-reperfusion injury in liver transplantation—From bench to bedside. Nat Rev Gastroenterol Hepatol 2013; 10:79–89
  5. Perico N, Cattaneo D, Sayegh MH, et al: Delayed graft function in kidney transplantation. Lancet 2004; 364:1814–1827
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_ஊட்டக்குறை&oldid=3294636" இலிருந்து மீள்விக்கப்பட்டது