குருத்தணு சிகிச்சை

குருத்தணு சிகிச்சை (Stem-cell therapy) என்பது புதிய, முதிர்ச்சியடைந்த குருத்தணுக்களை, நோய்வாய்ப்பட்ட அல்லது காயங்களைக் கொண்ட பாதிக்கப்பட்டத் இழையங்களில் செலுத்துவதன் மூலம் சிகிச்சையளிக்கும் ஒரு தலையீட்டு மருத்துவ உத்தியாகும். பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குருத்தணு சிகிச்சையானது மனித நோய்களுக்கு சிகிச்சையளிப்பதிலும், நோய்களால் விளையும் பாதிப்புகளைத் தணிப்பதிலும் முக்கிய பங்காற்றும் என நம்புகிறார்கள்[1]. முதல்நிலை உயிரணுக்களான குருத்தணுக்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையையும், உயிரணு வேற்றுமைப்பாடு மூலம் வெவ்வேறு அளவுகளில் தொடர்ந்த பல சந்ததிகளூடாக புதிய உயிரணுக்களை உருவாக்கும் திறனையும் கொண்டவையாக இருக்கின்றன[2]. அதனால் இந்த குருத்தணுக்களின் பயன்பாடு நிராகரிப்பிற்கு குறைந்த அளவே இடரினைக் கொண்டுள்ள, பக்கவிளைவுகளற்ற புதிய இழையங்களை உருவாக்கி, உடலின் பாதிப்படைந்த இழையங்களை மாற்றுகின்ற சிகிச்சைகளுக்கு மிகப்பெரும் சாத்தியங்களைக் கொடுக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருத்தணு_சிகிச்சை&oldid=3537413" இலிருந்து மீள்விக்கப்பட்டது