குருத்துவார்

(குருத்துவாரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குருத்துவார் (Gurdwara, பஞ்சாபி: ਗੁਰਦੁਆਰਾ, gurduārā or , gurdwārā) என்பது சீக்கிய சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலமாகும். குருத்துவார் என்பதற்கு குருவை அடையும் வழி எனப் பொருள். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று குருவை வழிபடலாம் [1] குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு மேடையில் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கிய மத நூலை வைத்து, சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி வழிபடுவர். குருத்துவாரில் லங்கர் (Langar) எனப்படும் மற்றும் உணவு விடுதியில் அனைவருக்கும் இலவசமாக உணவு பரிமாறப்படும்.[2] பெரிய அளவிலான குருத்துவார்களில் நூலகம், குழந்தைகள் காப்பகம் மற்றும் சமய வகுப்பறைகள் வசதிகள் உண்டு. [3] குருத்துவார் கோயில் உச்சியில் சீக்கிய சமயக் கொடி பறக்கும். குருத்துவாரில் ஆண்களும் பெண்களும் தங்கள் தலையைக் குல்லாய் அல்லது துணியை மூடியவாறு செல்வது கட்டாயம்.

ஹர் மந்திர் சாகிப், அமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா
ஹசூர் சாகிப் குருத்துவார், நாண்டெட், மகாராட்டிரம், இந்தியா

புகழ்பெற்ற குருதுவார்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சர் நகரில் உள்ள பொற்கோயில் குறிப்பிடத்தக்கதாகும்..

தன்னார்வத் தொண்டர்கள் தொகு

குருத்துவாரில் சமையல், துப்புரவு பணி, மற்றும் சமயப் பணி செய்திட சீக்கிய சமய ஆண்களும் பெண்களும் உயர்வு தாழ்வு பாராது மிக விருப்பத்துடன் முன் வருகின்றனர்.

குருத்துவாரில் நடைபெறும் முக்கிய சடங்குகள் தொகு

  1. குழந்தைகளுக்கு பெயரிடுதல்
  2. ஞானஸ்நானம் செய்தல்
  3. திருமணம் செய்து வைத்தல்
  4. நீத்தார் கடன் செய்தல்

முக்கிய குருத்துவார்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sikhism". TalkTalk (Helicon Publishing). http://www.talktalk.co.uk/reference/encyclopaedia/hutchinson/m0002601.html. பார்த்த நாள்: 18 March 2013. 
  2. {{cite web|title=The Gurdwara|url=http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ritesrituals/gurdwara_1.shtml%7Cwork=http://www.bbc.co.uk%7Cpublisher=BBC%7Caccessdate=18 March 2013}
  3. "Gurdwara Requirements". http://www.worldgurudwaras.com இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004220923/http://www.worldgurudwaras.com/gurudwaras/gurdwara-requirements. பார்த்த நாள்: 18 March 2013. 

படக்காட்சியகம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருத்துவார்&oldid=3777362" இருந்து மீள்விக்கப்பட்டது