குரோமியம்(III) நிக்கோட்டினேட்டு

குரோமியம்(III) நிக்கோட்டினேட்டு (Chromium(III) nicotinate) என்பது C18H12CrN3O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிமவேதியியல் சேர்மமாகும். அயனச் சேர்மமான இதை சில சத்துப் பொருட்களில் குரோமியக் குறையை நிவர்த்தி செய்யும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இங்கெல்லாம் இதை குரோமியம் பல்நிக்கோட்டினேட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். நீரிழிவு நோய் வகை 2 உடன் தொடர்புடைய பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ உணவு என்று குரோமியம்(III) நிக்கோட்டினேட்டு கருதப்படுகிறது. இந்த உணவுக் கூட்டுப் பொருளை நியாசின்-பிணைப்பு குரோமியம் என்றும் அழைக்கிறார்கள் [1].

ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
குரோமியம்(3+) டிரை(பிரிடின்-3-கார்பாக்சிலேட்டு)
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 64452-96-6
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 56843898
ChemSpider 8085563
ஒத்தசொல்s குரோமியம் டிரைநிக்கோட்டினேட்டு
வேதியியல் தரவு
வாய்பாடு C18

H12 Br{{{Br}}} N3 O6  

மூலக்கூற்று நிறை 418.30 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/3C6H5NO2.Cr/c3*8-6(9)5-2-1-3-7-4-5;/h3*1-4H,(H,8,9);/q;;;+3/p-3
    Key:MSPQQAUTCRWLGR-UHFFFAOYSA-K

வேதியியல்

தொகு

ஒரு குரோமியம் அயனிக்கு மூன்று நிக்கோட்டினிக் அமில அலகுகள் சேர்ந்து குரோமியம்(III) நிக்கோட்டினேட்டு சேர்மம் உருவாகிறது. எனவே இதை குரோமியம்(III) இன் டிரைநிக்கோட்டினேட்டு உப்பு என்று கூறலாம். பல்நிக்கோட்டினேட்டு எனப்படும் உணவுக் கூட்டுப் பொருள் டிரைநிக்கோட்டினேட்டும் டைநிக்கோட்டினேட்டும் சேர்ந்த ஒரு கலவையாகும். இக்கலவையில் டிரைநிக்கோட்டினேட்டு அதிக அலவில் கலந்துள்ளது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Preuss, H. G.; Bagchi, D.; Bagchi, M.; Rao, C. V. S.; Dey, D. K.; Satyanarayana, S. (May 2004). "Effects of a natural extract of (–)-hydroxycitric acid (HCA-SX) and a combination of HCA-SX plus niacin-bound chromium and Gymnema sylvestre extract on weight loss". Diabetes, Obesity & Metabolism 6 (3): 171–180. doi:10.1111/j.1462-8902.2004.00328.x. பப்மெட்:15056124. 
  2. "Mixture of chromium di- and tri-nicotinate as a source of chromium added for nutritional purposes in food supplements and in foods for particular nutritional uses". The EFSA Journal 887: 1–24. 2008. http://www.efsa.europa.eu/en/scdocs/doc/ans_ej887_Chromium_di_and_tri-nicotinate_op_en,0.pdf?ssbinary=true. பார்த்த நாள்: 2017-12-13.