குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி

குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி (Specially Designated Terrorist (SDT) ஐக்கிய அமெரிக்காவின் நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டு சொத்துக்களை கட்டுப்படுத்தும் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி அல்லது பயங்கரவாத அமைப்பைக் குறிக்கும்.[1][2]இது தொடர்பான நிர்வாக ஆணை எண் 12947 அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 23 சனவரி 1995 அன்று பிறப்பித்தார்.[3][4]

குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நிதித் தொடர்பான பரிவர்த்தனைகள் அமெரிக்க நிதித் துறையால் சனவரி 1995 முதல் தடுக்கப்படுகிறது.[1][3][4]

மத்தியக் கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்களாக கருதப்படும் 12 அமைப்புகளும் மற்றும் 18 தனி நபர்களும், குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. அமெரிக்க நிதித்துறைக்கும், தலைமை அரசு வழக்கறிஞருக்கும் பிற அமைப்புகளையும், தனி நபர்களையும் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[1][5][6]

அமெரிக்க அரசு 1995ல் பன்னாட்டுப் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தது.[3]25 சனவரி 1995 அன்று அமெரிக்கா ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் குறிப்பிட்டு அறிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது. அமெரிக்கா ஆகஸ்டு 1995ல் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத் தலைவர் மௌசா முகமது அபு மர்சூக்கையும், 1998ல் ஒசாமா பில் லேடனையும், 4 டிசம்பர் 2001 அன்று புனித நாட்டிற்கான அறக்கட்டளையையும் குறிப்பிட்டு அறிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல் சேர்த்தது. [4][7][8] 28 பிப்ரவரி 2006 அன்று பாலஸ்தீன தீவிரவாத இயக்கத்திற்கு பங்களித்த காரணத்தால் சமி அல்-அரியான் என்பவரை 57 மாத சிறைதண்டனை விதித்தது.[9][10][11]

அமெரிக்க அரசு குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பித்து வருகிறது.[2][12][13][14]

விளைவுகள்

தொகு

குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்.[2]கூடுதலாக குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் நிதி, சரக்கு மற்றும் சேவை பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.[15][16][17][18] மேலும் அமெரிக்காவில் செயல்படும் குறிப்பிட்ட பயங்கரவாதி அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு அமெரிக்க நிறுவனமும், அது குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும்.[1][4][15][19][20] பயங்கரவாதி அல்லது பயங்கரவாத அமைப்புகளுக்காக செயல்படும் எந்தவொரு அமெரிக்க நிறுவனம் மீது தடைகள் மேற்கொள்ளப்படும்.[1][4][21][22][23]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Costigan, Sean S.; Gold, David (2007). Terrornomics. Ashgate Publishing, Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-4995-3. பார்க்கப்பட்ட நாள் March 12, 2010.
  2. 2.0 2.1 2.2 Zarate, Juan C. (2013). Treasury's War. New York: PublicAffairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610391153.
  3. 3.0 3.1 3.2 U.S. Treasury Department. "Terrorist Assets Report; Calendar Year 2002" (PDF). Archived (PDF) from the original on August 26, 2009. பார்க்கப்பட்ட நாள் March 12, 2010.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Clinton, William J. (January 23, 1995). "Executive Order 12947". Wikisource. Archived from the original on May 12, 2011. பார்க்கப்பட்ட நாள் April 13, 2011.
  5. "Islamic Jihad Leader's Bank Accounts Frozen". Gainesville Sun. November 3, 1995. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  6. The Code of Federal regulations of the United States of America. 1997. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  7. Checkpoints in cyberspace: best practices to avert liability in cross-border transactions பரணிடப்பட்டது 2022-03-20 at the வந்தவழி இயந்திரம், American Bar Association, Roland L. Trope, Gregory E. Upchurch, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59031-429-8, accessed March 12, 2010
  8. Jimmy Gurulé (2008). Unfunding terror: the legal response to the financing of global terrorism. Edward Elgar Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84542-962-1. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  9. "Hillsborough: Plea deal overcame the discord". Sptimes.com. April 24, 2006. Archived from the original on March 3, 2016. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  10. "Plea Agreement; U.S. v. Al-Arian" (PDF). February 28, 2006. Archived from the original (PDF) on March 1, 2012. பார்க்கப்பட்ட நாள் March 8, 2010.
  11. U.S. Department of Justice (May 1, 2006). "Sami Al-Arian Sentenced to 57 Months in Prison for Assisting Terrorist Group" (PDF). Press Release. Archived (PDF) from the original on October 4, 2012. பார்க்கப்பட்ட நாள் March 8, 2010.
  12. Michael David Beck (2003). To supply or to deny: comparing nonproliferation export controls in five key countries. Kluwer Law International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-411-2216-8. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  13. The cost of counterterrorism: power, politics, and liberty பரணிடப்பட்டது 2022-03-20 at the வந்தவழி இயந்திரம், Laura K. Donohue, Cambridge University Press, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-84444-4, accessed March 12, 2010
  14. "Hamas-Linked US Ventures Under Scrutiny". Fox News. April 27, 2004. Archived from the original on February 6, 2011. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  15. 15.0 15.1 The Code of Federal regulations of the United States of America. 1997. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  16. King, Philip; King, Sharmila (September 25, 2008). International economics and ... பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780072873337. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  17. Root, William A.; Liebman, John R.; Thomsen, Roszel Cathcart (15 November 2006). United States Export Controls. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780735565197. Archived from the original on 20 March 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  18. Jandrowitz, James; Spaulding, Jay (September 11, 2001). 9-11 And Beyond. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780757504730. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  19. Paul Sperry (2005). Infiltration: how Muslim spies and subversives have penetrated Washington. Thomas Nelson Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59555-003-8. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  20. Costigan, Sean S.; Gold, David (September 11, 2001). Terrornomics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754649953. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  21. The Code of Federal regulations of the United States of America. 1997. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  22. Costigan, Sean S.; Gold, David (September 11, 2001). Terrornomics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754649953. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.
  23. King, Philip; King, Sharmila (September 25, 2008). International economics and ... பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780072873337. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.

வெளி இணைப்புகள்

தொகு