குறிப்பு வினைமுற்று

வினைமுற்று வகை

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று எனப்படும் எடுத்துக்காட்டு அவன் பொன்னன்பெற்றது.

எ.கா:அவன் பொன்னன்.

இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும்.

பொன்னன் - பொருள்
ஆரூரன் - இடம்
ஆதிரையான் - காலம்
கண்ணன் - சினை
கரியன் - குணம்
நடையன் - தொழில்

இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிப்பு_வினைமுற்று&oldid=3514691" இலிருந்து மீள்விக்கப்பட்டது