குறுக்கீட்டு விளைவு

அலைகளின் மேற்பொருந்துதல் காரணமாக ஒளிச்செறிவில் ஏற்படும் பகிர்வு குறுக்கீட்டு விளைவு எனப்படும்.

தத்துவம்

தொகு

குறுக்கீட்டு விளைவானது மேற்பொருந்துதல் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது.

 
இடப்பக்கம் செல்லும் பச்சை நிற ஒளியும் வலப்பக்கம் செல்லும் நீலநிற ஒளியும் குறுக்கிட்டு சிவப்பு நிற ஒளி உருவாதல்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலைகள் ஒருங்கிணைந்தாற்போல் ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் போது, ஓர் அலையின் பரவுதல் மற்றவற்றினால் பாதிக்கப்படாமல், ஒவ்வொரு புள்ளியிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு புள்ளியின் மொத்த இடப்பெயர்ச்சி மற்ற தனித்தனி அலைகளின் இடப்பெயர்ச்சி வெக்டர்களின் கூடுதலுக்குச் சமமாகும். இதனையே மேற்பொருந்துதல் தத்துவம் என்கிறோம்.

Y1 மற்றும் Y2 என்பவற்றை தனி இடப்பெயர்ச்சிகளாகக் கொண்டால் தொகுபயன் இடப்பெயர்ச்சி, Y=Y1+Y2

ஓரியல் மூலங்கள்

தொகு

சம அலைநீளமும் சமவீச்சும் கொண்டு ஒத்த கட்டம் அல்லது ஒரே கட்டவேறுபாட்டுடன் இரண்டு அலைகளை வெளிப்படுத்தும் ஒளி மூலங்கள் ஓரியல் மூலங்கள் ஆகும். இரண்டு தனித்தனியான ஒற்றைநிற ஒளிமூலங்கள் ஒரே அலைநீளம் கொண்ட அலைகளை வெளியிடும். ஆனால்,அவைகள் ஒரே கட்டத்தில் அமையாது. இவ்வகை மூலங்கள் ஓரியல் மூலங்கள் ஆகாது. ஏனெனில், அணுக்களால், ஒத்த கட்டத்திலுள்ள ஒளி அலைகளை வெளியிட முடியாது. இத்தகைய ஒளிமூலங்கள் ஓரியலற்ற மூலங்கள் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்கீட்டு_விளைவு&oldid=3711357" இலிருந்து மீள்விக்கப்பட்டது