குறுஞ்சீர் வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
குறுஞ்சீர் வண்ணம் என்பது செய்யுளில் குறில் எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
- உறுபெயல் எழிலி தொகுபெயல் பொழியர்
- சிறுகொடி அவரை பொதிநனை அவிழக்
- குறிவரு பருவம் இதுவென மறுகுபு
- செறிதொடி நலமிலை அழியல்
- அறியலை அரிவை கருதிய பொருளே [1]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ யாப்பருங்கல விருத்தி மேற்கோள்